ஆப்நகரம்

அன்வர் மட்டுமில்ல சுவர் திராவிட் ஆரம்பிச்சது நம்ம சென்னையில் தான்... சும்மா அதிருதுல்ல!

சுமார் 23 ஆண்டுக்கு முன் பாகிஸ்தானின் சயீத் அன்வர் உலக சாதனை படைத்த அதே போட்டியில் தான் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் தனது முதல் ஒருநாள் சதம் அடித்தார். அன்று துவங்கிய அவரின் சதத்தின் பயணம் இந்திய கிரிக்கெட் அணிக்காக பல சாதனைகள் படைத்துள்ளார்.

Samayam Tamil 21 May 2020, 5:26 pm
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சயீத் அன்வர், சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் இந்திய அணிக்கு எதிரான சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடந்த பெப்சி இண்டிபென்டண்ட்ஸ் கோப்பை தொடரின் ஆறாவது போட்டியில் 146 பந்தில் 194 ரன்கள் விலாசினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸின் (189 ரன்கள், எதிர் - இங்கிலாந்து, 1984) சாதனையை தகர்த்தார்.
Samayam Tamil saeed anwar world record overshadows rahul dravids maiden ton
அன்வர் மட்டுமில்ல சுவர் திராவிட் ஆரம்பிச்சது நம்ம சென்னையில் தான்... சும்மா அதிருதுல்ல!



அன்வர் உலக சாதனை

அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ரமேஷ் ராஜா, முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்கம் முதலே சையது அன்வர், இந்திய பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். எதிர் முனையில் விக்கெடுகள் சீரான இடைவேளையில் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் அசராமல் பவுண்டரிகளாக அன்வர் விளாசினார். இரட்டை சதம் என்ற இமாலய சாதனைக்கு வெறும் 6 ரன்கள் இருந்த நிலையில் ஜாம்பவான் சச்சின் அன்வரை அவுட்டாக்கினார்.

திராவிட் போராட்டம்

சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது. கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ராகுல் திராவிட் 107 ரன்கள் அடித்து போராடிய போதும், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் அன்வரின் உலக சாதனை ராகுல் திராவிட்டின் முதல் ஒருநாள் சாதனையை மறைத்துவிட்டது. அன்வரின் சாதனையை நினைவு கூறும் அதே நாளில் இந்திய இந்திய ரசிகர்கள் திராவிட்டின் முதல் ஒருநாள் சதத்தை கொண்டாடி வருகின்றனர்.

Twitter-Harish S Itagi

Twitter-PrabhalaKishore

சாதனை பட்டியல்

டுவிட்டரில் டிரெண்டாகும் ராகுல் திராவிட்டின் சில சாதனைகள். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 10000 ரன்களை 10 ஆண்டுகள் 68 நாட்களில் எட்டினார். முன்னதாக இந்த சாதனையை ராகுல் திராவிட் 10 ஆண்டுகள் 317 நாட்களில் எட்டினார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர் கொண்டா வீரர் திராவிட். இவர் வேறு எந்த வீரரும் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 31,258 பந்துகளை எதிர்கொண்டார்.

Twitter-Vishal

​கடவுள் கைவிட்ட போதும்

டெஸ்ட் கிரிக்கெட்டில் திராவிட் ஆடும் தடுப்பாட்டம் போல கொரோனாவுக்கு எதிராக மக்கள் அதேபோல போராட வேண்டும் என சில ரசிகர்கள் தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளனர்.மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்சமாக தொடர்ச்சியாக டக் அவுட்டாகாமல் 173 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரரும் திராவிட் தான். மேலும் சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் கைவிட்ட போதும், சுவர் திராவிட் எப்போதும் அணியை கைவிட்டதில்லை என்பது போல ரசிகர்கள் சில ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்