ஆப்நகரம்

முடிவுக்கு வருகிறதா சகாவின் கிரிக்கெட் வாழ்க்கை: தோள்பட்டை காயத்தால் சிக்கல்!

இதுவரை வெறும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியிருப்பதாக தெரிவித்த இந்திய விக்கெட் கீப்பர் சகாவுக்கு, கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Samayam Tamil 19 Jul 2018, 10:34 pm
கொல்கத்தா: இதுவரை வெறும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியிருப்பதாக தெரிவித்த இந்திய விக்கெட் கீப்பர் சகாவுக்கு, கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சகா. ஒருநாள், டி-20 போட்டிகளில் முன்னாள் கேப்டன் தோனி உள்ளதால், அவர் ஓய்வு பெற்ற டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இந்திய அணியின் பிரதான தேர்வாக இருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி-20 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் 1ல் துவங்கவுள்ளது.

சகா இல்லை.....
இந்நிலையில் இத்தொடரின் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ., நேற்று அறிவித்தது. இதில் சகா தேர்வு செய்யப்படவில்லை. இவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தோள்ப்பட்டை காயம்....
இந்நிலையில் இதுவரை வெறும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியிருப்பதாக தெரிவித்த இந்திய விக்கெட் கீப்பர் சகாவுக்கு, கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அடுத்த மாதம் ஆப்ரேஷன்....
இதுகுறித்து பிசிசிஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிசியோ சகாவுக்கு தோள்பட்டை காயம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் ஆப்ரேஷம் மட்டும் தான் அவர் குணமடைய ஒரே வழி என தெரிவித்துள்ளார். இதற்காக இங்கிலாந்தில் அடுத்த மாதம் சகா ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்தால் சுமார் 2 மாதம் சகாவால் பேட்டை தொடக்கூட முடியாது. அதன் பின் தான் அந்த காயம் குணமடையத்துவங்கும்.’ என்றார்.

இதனால் சகாவின் கிரிக்கெட் வாழ்க்கை தற்போதைக்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஆனால் இதில் இருந்து சகா முழுமையாக மீண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

KOLKATA: Believed to be a minor thumb injury till now, Indian wicketkeeper-batsman Wriddhiman Saha is actually nursing a career-threatening shoulder problem caused by a "bungled" rehabilitation programme at the National Cricket Academy, a top BCCI official has claimed.

அடுத்த செய்தி

டிரெண்டிங்