ஆப்நகரம்

நீதிடா.. நேர்மைடா.. நியாயம்டா... இலங்கை வீரன் பண்ணது தப்பே இல்லை - சஞ்சய் மஞ்ரேகர்

இலங்கை வீரர் தில்ருவான் பெரேரா டிரெஸ்ஸிங் ரூமைப் பார்த்துவிட்டு டி.ஆர்.எஸ் எடுத்தது தவறில்லை என சஞ்சய் மஞ்ரேகர் தெரிவித்துள்ளார்.

TOI Sports 19 Nov 2017, 7:08 pm
இலங்கை வீரர் தில்ருவான் பெரேரா டிரெஸ்ஸிங் ரூமைப் பார்த்துவிட்டு டி.ஆர்.எஸ் எடுத்தது தவறில்லை என சஞ்சய் மஞ்ரேகர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sanjay manjrekar has a solution to sri lankas brain fade in kolkata
நீதிடா.. நேர்மைடா.. நியாயம்டா... இலங்கை வீரன் பண்ணது தப்பே இல்லை - சஞ்சய் மஞ்ரேகர்


இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைப்பெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடி வரும் இலங்கை அணி சிறப்பாக விளையாடி 250க்கும் அதிகமாக ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

டிரெஸ்ஸிங் ரூம் உதவி:
சமி வீசிய 57வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட தில்ருவான் பெரேராவுக்கு, எல்.பி.டபிள்யூ அவுட்டை அம்பயர் வழங்கினார்.
தொடர்ந்து அவுட் என நினைத்து கிளமிய பெரேரா டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் பார்த்துவிட்டு, மீண்டும் திரும்பி ரிவீவ் அம்பயரிடம் கேட்டார்.



தொடர்ந்து ரிவிவ் செக் செய்ததில், பெரேரா அவுட் இல்லை என தெரிந்தது. இதையடுத்து அவர் தொடர்ந்து விளையாடினார்.

மஞ்ரேகர் ஆதரவு :
பெரேரா செய்தது தவறு இருப்பதாக தெரியவில்லை. டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் பார்த்துவிட்டு, ரிவீவ் கேட்டதில் எந்த பிரச்னையும் இல்லை. பீல்டிங் செய்பவர்கள் ரிவீவ் கேட்கும் போது, சக வீரர்களிடம் ஆலோசனை கேட்பது எப்படி தவறில்லையோ, அதே போல் பேட்ஸ்மேன், டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் வீரர்கள் கொடுக்கும் சிக்னலின் படி ரிவிவ் கேட்பது தவறில்லை.

15 நொடிக்குள் கேட்க வேண்டும் என்பது தான் விதியே தவிர மற்ற எந்த விதியும் இங்கு இல்லை, எனக்கு நியாயம் தான் முக்கியம் என இலங்கை வீரருக்கு ஆதரவாக முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேகர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்