ஆப்நகரம்

Kerela vs Goa : சாத்து சாத்துன்னு சாத்தி எடுத்த சஞ்சு சாம்சன்: இரட்டை சதம் அடித்து மிரட்டல்!

Vijay Hazare Trophy: கோவா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி தொடரின் லீக் போட்டியில் கேரளா அணியின் சஞ்சு சாம்சன் இரட்டை சதம் அடித்து மிரட்டினார்.

Samayam Tamil 12 Oct 2019, 1:34 pm
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடர் நடக்கிறது. இந்தாண்டுக்கான தொடர், வரும் அக்டோபர் 16 வரை நடக்கிறது. இதன் லீக் போட்டியில் கேரளா, கோவா அணிகள் மோதுகின்றன.
Samayam Tamil sanju samson


சொதப்பல் துவக்கம்...
இதன் ‘டாஸ்’ வென்ற கேரளா அணி கேப்டன் ராபின் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கேரளா அணிக்கு கேப்டன் ராபின் (10) பீல்டிங்கின் போது தடைசெய்த காரணத்தால், வெளியேற்றப்பட்டார்.

மரண மாஸ் காட்டும் இந்திய பவுலர்கள்... : தத்தளிக்கும் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள்!
மற்றொரு துவக்க வீரர் விஷ்ணு வினோத் (7) சொதப்பலாக வெளியேறினார். பின் இணைந்த சாம்சன், சச்சின் பேபி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

சாத்திய சாம்சன்....
கோவா பவுலர்களின் பந்துவீச்சை ஈவு இரக்கம் இல்லாமல் பொளந்து கட்டிய சாம்சன், 127 பந்தில் 20 பவுண்டரி, 10 சிக்சர்கள் என இரட்டை சதம் விளாசினார். இவருக்கு செம்ம கம்பெனி கொடுத்த சச்சின் பேபி 135 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 127 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேரளா அணி மொத்தமாக 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 377 ரன்கள் எடுத்தது. சாம்சன் (212), முகமது அசாருதின் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

பக்காவா பயன்படுத்திய ‘கிங்’ கோலி.... முகத்தை மூடி ஓடி ஒளிந்த முத்துசாமி...!
முதலிடம்...
இதன் மூலம் இந்தாண்டு விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரில் ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சாம்சன் முதலிடத்துக்கு முன்னேறினார்.

இந்தாண்டு விஜய் ஹசாரே டிராபி தொடரில் அதிகரன்கள் அடித்த வீரர்கள்
சாம்சன் - 212* (எதிர்- கோவா)
புர்காயஸ்தா - 163* (எதிர்- மிசோரம்)
சமாரத் சேத் - 155* (எதிர்- சிக்கிம்)
மணீஷ் பாண்டே - 142* (எதிர்- சத்தீஸ்கர்)
பிஸ்வா - 134 (எதிர்- மிரோரம்)


இரண்டாவது வீரர்...
இதன் மூலம் விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரில் இரட்டை சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார் சாம்சன். கடந்த ஆண்டில் உத்தரகண்ட் வீரர் வீர் கவுசல் இரட்டை சதம் அடித்தார். தவிர, இத்தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புது வரலாறு படைத்தார் சாம்சன்.

கண்ணீர் விடாத குறையா அழுக விட்ட ‘கிங்’ கோலி...: இந்திய அணி 601 ரன்களுக்கு ‘டிக்ளேர்’!
உள்ளூர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்
212* சாம்சன் எதிர்- கோவா, 2019/20
202 கரண் வீர கவுசன் எதிர்- சிக்கிம், 2018/19
187* கேக்வாத்(இந்தியா ஏ) எதிர்- இலங்கை ஏ, 2019
187 ரஹானே (மும்பை) எதிர்- மகாராஷ்டிரா, 2007/08

ஜாம்பவான்கள் பட்டியல்...
தவிர, லிஸ்ட் ‘ஏ’ கிரிக்கெட்டில் இரட்டைசதம் அடித்துள்ள இந்திய வீரர்கள் பட்டியலில் சாம்சன் இணைந்தார். முன்னதாக சச்சின், விரேந்தர் சேவாக், ரோஹித் ஷர்மா (3 முறை), ஷிகர் தவன், வீர் கவுசல் ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.

129 பந்தில்...
இப்போட்டியில் மொத்தமாக 129 பந்தில் 212 ரன்கள் அடித்த சாம்சன். படைத்த மேலும் சில சாதனைகள்..

* லிஸ்ட் ஏ போட்டியில் விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ரன். (முன்னதாக அபித் அலி (209))
* லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய வீரர் அடித்த அதிவேக 200 ரன்கள் (125 பந்து)
* லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மூன்றாவது வீரராக களமிறங்கி 200 ரன்கள் அடித்த முதல் இந்தியர்.
* லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் முதல் சதத்தில் அதிகபட்ச ரன்கள் (212*)

அடுத்த செய்தி

டிரெண்டிங்