ஆப்நகரம்

இதை மட்டும் அலிம் தர் சரியா செய்யலன்னா தென் ஆப்ரிக்காவில் இந்தியா வரலாறு படைத்திருக்குமா?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணம் இந்திய அணி வீரர்கள் மட்டுமில்லாமல் 3வது நடுவர் (டிவி அம்பயர்) அலிம் தர்ரும் தான் காரணமாக திகழ்கின்றனர்.

Samayam Tamil 14 Feb 2018, 8:32 pm
போர்ட் பிளேயர் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணம் இந்திய அணி வீரர்கள் மட்டுமில்லாமல் 3வது நடுவர் (டிவி அம்பயர்) அலிம் தர்ரும் தான் காரணமாக திகழ்கின்றனர்.
Samayam Tamil savind did umpire aleem dar play a key role in indias historic triumph twitter thinks so
இதை மட்டும் அலிம் தர் சரியா செய்யலன்னா தென் ஆப்ரிக்காவில் இந்தியா வரலாறு படைத்திருக்குமா?


தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், ஒருநாள் போட்டி தொடரை இந்தியா 4-1 என வென்று வரலாறு படைத்துள்ளது.

கோலியை காப்பாற்றிய அலிம் தர் :
நேற்றைய போட்டியில் இந்தியா தொடக்கத்தில் சிறப்பாகவும், முடிவில் சுமாராகவும் ரன் குவித்தது.
முக்கியமான இந்த போட்டியில் பேட்டிங் செய்ய வந்த கோலிக்கு தெ.ஆ கீப்பர் கிலாசன் ஸ்டெம்பிங் செய்தார். ஆனால் 3வது நடுவராக இருந்த அலிம் தர் மிக சரியாக பார்த்து கோலி அவுட்டில்லை என கூறினார்.

ஆம்லாவை விரட்டிய அலிம் தர் :
அதே போல் முக்கியமான தருணத்தில் தென் ஆப்ரிக்கா தொடக்க வீரர் அசிம் ஆம்லா மிக சிறப்பாக விளையாடி வந்தார். அவரின் விக்கெட்டை எடுக்க பவுலர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது, 71 ரன் எடுத்திருந்த நிலையில் சிங்கிள் எடுக்க ஆசைப்பட்டு ஹர்திக் பாண்டாவால் ரன் அவுட்டானார்.

மேலும் படிக்க : ​ இந்திய வெற்றிக்கு சரியாக தீர்ப்பு சொன்ன அலிம் தர்ருக்கு குவியும் பாராட்டுகள்!

இந்த ரன் அவுட்டும் கணிப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இருப்பினும் டிவி அம்பயர் அலிம் தர் சிறப்பாக செயல்பட்டு ஆம்லா அவுட் என தெரிவித்தார்.



இந்தியா சாதனை வெற்றி :
அலிம் தர்ரின் இந்த இரண்டு முக்கிய முடிவுகளால் இந்தியா தென் ஆப்ரிக்காவில் 4-1 என தொடரை வென்று சரித்திர சாதனையைப் படைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்