ஆப்நகரம்

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த குட்டிய அணி ஸ்காட்லாந்து - 371 ரன் குவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடும் ஸ்காட்லாந்து அணி 371 ரன்களை குவித்துள்ளது.

Samayam Tamil 10 Jun 2018, 8:11 pm
ஈடன்பெர்க் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடும் ஸ்காட்லாந்து அணி 371 ரன்களை குவித்துள்ளது.
Samayam Tamil Calum MacLeod 1


ஸ்காட்லாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஒரேஒரு ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.

371 ரன் குவிப்பு:
தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து தொடக்க வீரர்கள் மேத்திவ் குரோஸ் 48, கேப்டன் கெய்லி கோட்சர் 58 ரன்கள் குவித்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.

140 ரன் விளாசல் :
மூன்றாவது வீரராக களமிறங்கிய காலும் மெக்லியாட் கடைசிவரை விக்கெட் இழக்காமல் 94 பந்தில் 3 சிக்ஸர், 16 பவுண்டரி விளாசி 140 ரன்களை குவித்தார்.
அடுத்து வந்த ரிச்சி பெரிங்டோன் 39, ஜார்ஜ் முன்சே 55 ரன்கள் விளாச, ஸ்காட்லாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்களை குவித்தது.

விக்கெட் எடுக்க திணறிய இங்கிலாந்து 5 பவுலர்கள் தலா 10 ஓவர் வீசி உட் 71, வில்லி 72, ஆடில் ரசித் 72, பிளக் நட் 85, மோயின் அலி 66 ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்