ஆப்நகரம்

சொதப்பல் சகிப் புதிய கேப்டன்! வங்கதேசத்தின் விபரீத முடிவு

வங்கதேசத்தின் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

TNN 23 Apr 2017, 12:10 pm
வங்கதேசத்தின் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil shakib confirmed as t20i captain
சொதப்பல் சகிப் புதிய கேப்டன்! வங்கதேசத்தின் விபரீத முடிவு


வங்கதேச டி20 அணியின் கேப்டனாக இருந்த மொர்த்தாசா அண்மையில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஒய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து டி20 அணியின் புதிய கேப்டனை தேர்வு செய்ய அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை கூடியது.

கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் கேப்டன் சகிப் அல் ஹசன் மீண்டும் டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

ஏற்கெனவே, 2009 முதல் 2010 வரை டி20 கேப்டனாக இருந்துள்ளார் சகிப். அப்போது வங்கதேச அணி விளையாடிய நான்கு டி20 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்