ஆப்நகரம்

இலங்கை அணியை மிரட்ட வரும் இளம்புயல் தாகூர்!

இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

TNN 31 Aug 2017, 2:36 pm
இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
Samayam Tamil shardul thakur debuts vs sl in 4th odi
இலங்கை அணியை மிரட்ட வரும் இளம்புயல் தாகூர்!


இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைபற்றியுள்ளது. நான்காவது போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இப்போட்டிக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், சஹல் மற்றும் கெதார் ஜாதவ்க்கு பதிலாக ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

அறிமுக வீரராகக் களமிறங்கும் ஷர்துல் தாகூர் மகாராஷ்டராவைச் சேர்ந்தவர். 25 வயது இளைஞரான தாகூர் வலதுகை மிதவேகப்பந்துவீச்சாளர் ஆவார்.

ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 2015ஆம் ஆண்டு பஞ்சாப் அணியிலும் 2017ஆம் ஆண்டு புனே அணியிலும் இடம்பெற்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்