ஆப்நகரம்

சச்சினை பின்னுக்கு தள்ளி அதிவேகமாக ஆயிரத்தை கடந்த ஷிகர் தவான்!

ஐசிசி.,யால் நடக்கும் கிரிக்கெட் தொடரில், அதிகவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமை பெற்றார்.

TOI Sports 11 Jun 2017, 10:10 pm
லண்டன்: ஐசிசி.,யால் நடக்கும் கிரிக்கெட் தொடரில், அதிகவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமை பெற்றார்.
Samayam Tamil shikhar dhawan became the fastest to 1000 runs in icc tournaments india v south africa champions trophy 2017
சச்சினை பின்னுக்கு தள்ளி அதிவேகமாக ஆயிரத்தை கடந்த ஷிகர் தவான்!


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

லண்டனில் நடந்த மிக முக்கியமான 11வது லீக் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும், தோல்வியடையும் அணி வீட்டுக்கு கிளம்பும் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின.

இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஜொலிக்க தவற, அந்த அணி 44.3 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுலப இலக்கை துரத்திய இந்திய அணி 38 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இதில் இந்திய வீரர் ஷிகர் தவான், 78 ரன்கள் எடுத்தார். இவர் 32 ரன்கள் எடுத்த போது, ஐசிசி., நடத்தும் போட்டிகளில் 1000 ரன்களை கடந்து அசத்தினார். 16 ஐசிசி இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டிய ஜாம்பவான் சச்சின் (18 இன்னிங்ஸ் ) சாதனையை முறியடித்தார்.

இப்பட்டியலில் நுழைய இந்திய கேப்டன் கோலியும் (939 ரன்கள், 27 இன்னிங்ஸ்) வரிசையில் உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்