ஆப்நகரம்

IPL 2019: கொல்கத்தாவில் இருந்து டெல்லி அணிக்கு மாறிய ஷிகா் தவான்

நிதிப்பிரச்சினை காரணமாக 2019ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இருந்து ஷிகா் தவான் டெல்லி அணியில் விளையாடவாா் என்று ஐதராபாத் அணி நிா்வாகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 5 Nov 2018, 9:24 pm
நிதிப்பிரச்சினை காரணமாக ஷிகா் தவான் ஐதராபாத் அணியில் இருந்து டெல்லி அணிக்கு மாற்றப்படுவதாக சன் ரைசா்ஸ் நிா்வாகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil Srh Dhawan


இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரரான ஷிகா் தவான் ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறாா். இந்நிலையில் சன் ரைசா்ஸ் ஐதராபாத் அணி நிா்வாகம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், கனத்த இதயத்துடன் இதனை அறிவிக்கிறோம். எங்கள் அணிக்காக நீண்ட காலம் ஆடிய ஷிகா் தாவன் 2019ல் வேரொறு அணிக்கு செல்கிறாா். ஏலத்தில் தவானை ரைட் டு மேட்ச் காா்டைப் பயன்படுத்தி சன்ரைசா்ஸ் ஏலத்தில் எடுத்ததில் மகிழ்ச்சியடைந்தது.

ஆனால், அவரை ஏலம் எடுத்தத் தொகை மீது அவருக்கு அதிருப்தி நிலவி வந்தது. இதனை நாங்கள் ஐ.பி.எல். விதிமுறைகளினால் மாற்றியமைக்க முடியவில்லை. இதனால் அவரை மற்றொரு அணிக்கு பரிமாற்றிக் கொள்வது இருதரப்பினருக்கும் உகந்ததாக இருக்கும்என்று அணி நிா்வாகம் கருதியது.

இத்தனை ஆண்டுகளாக ஷிகா் தவான் செய்த பங்களிப்புகளை சன்ரைசா்ஸ் மதிப்புடன் அணுகுகிறது. ஆனால் நிதிப்பிரச்சினை காரணமாக அவா் வேறு அணிக்கு செல்வது சரியென நினைத்து வருத்தமடைகிறோம். அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எங்களது வாழ்த்துகளை தொிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்