ஆப்நகரம்

டெல்லி புதுகேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வாணவேடிக்கை - கொல்கத்தாவுக்கு இமாலய இலக்கு

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி 219 ரன்கள் குவித்துள்ளது.

Samayam Tamil 27 Apr 2018, 9:51 pm
டெல்லி : கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி 219 ரன்கள் குவித்துள்ளது.
Samayam Tamil shreyas2


டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. டெல்லி அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரிதிவ் ஷா 44 பந்தில் 62 ரன்களும், கோலின் முன்ரோ 18 பந்தில் 33 ரன்கள் குவித்தும் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய புதிய இளம் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், மேக்ஸ் வெல் சேர்ந்து வாணவேடிக்கை காட்டினர்.

ஸ்ரேயஸ் ஐயர் 40 பந்துகளில் 10 சிக்ஸர் 3 பவுண்டரிகள் விளாசி 93 ரன்கள் குவித்தார். மேக்ஸ் வெல் 18 பந்தில் 27 ரன்கள் அடித்ஹ்டார்.
ஐபிஎல் கேப்டனான முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசிய வீரர் என்ற பெருமையை ஸ்ரேயஸ் ஐயர் பெற்றார்.
அதே போல் மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் அரைசதம் அடித்தவர் என்ற பெருமையை பிரித்வி ஷா பெற்றுள்ளார்.

இமாலய இலக்கு :
இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து சொதப்பிய டெல்லி அணி, இன்றைய கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்துள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்