ஆப்நகரம்

கோலி போல் ரன் மெஷினாக மாறிய இளம் வீரர் சுப்மன் கில்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Samayam Tamil 30 Jan 2018, 7:38 am
கிறிஸ்ட்சர்ச் : 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
Samayam Tamil shubman gill ton key as india eye big flourish
கோலி போல் ரன் மெஷினாக மாறிய இளம் வீரர் சுப்மன் கில்


நியூசிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைப்பெற்று வருகின்றது. இதில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே அணிகளை வென்றிருந்தது. காலிறுதியில் வங்கதேசத்தை வென்று அரையிறுதியில் இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

ரன் மெஷின் கில் :
இந்த தொடரில் சுப்மன் கில்லுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்த 4 போட்டிகளில் ரன் குவித்துள்ளார்.
- லீக் போட்டி

எதிரணி - ரன் விபரம்
ஆஸ்திரேலியா - 63
ஜிம்பாப்வே - 90* (59 பந்து)
வங்கதேசம் - 86 (காலிறுதி)
பாகிஸ்தான் - 102* (அரையிறுதி)

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கோலி போன்ற ஷாட்டை அடித்து புகழ் பெற்ற சுப்மன் கில், தற்போது அவரைப் போன்று இந்திய அணிக்கு ரன் மெஷினாக செயல்பட்டு வருகின்றார். சிறப்பாக பேட்டிங் செய்து வரும் சுப்மன் கில் 19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் சராசரி 100 வைத்துள்ளார். இவரை கொல்கத்தா அணி ரூ. 1.8 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்