ஆப்நகரம்

தனிஒருவனாக மல்லுக்கட்டும் மாத்யூஸ்: அசால்ட்டா அடிக்கும் இந்தியா!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது.

TOI Sports 27 Jul 2017, 5:40 pm
காலே: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது.
Samayam Tamil slvind first test match in day 2 final result
தனிஒருவனாக மல்லுக்கட்டும் மாத்யூஸ்: அசால்ட்டா அடிக்கும் இந்தியா!


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி, முதல் இன்னிங்சில், 3 விக்கெட்டுக்கு 399 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (144), ரகானே (39) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தியா ‘600’:
இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி, 600 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி, இந்த வேகப்பந்து வீச்சாளர் வேகத்தில் ஆட்டம் கண்டது.

முதலில் உமேஷ் யாதவ் வேகத்தில் கருணாரத்னே (2) வெளியேறினார். தொடர்ந்து முகமது ஷமி குனதிலகா (16), மெண்டிஸ் (0) ஆகியோரை ஒரே ஓவரில் வெளியேற்றினார்.

தரங்கா (64) அரைசதம் அடித்து அதிர்ஷ்டமில்லாமல் அவுட்டானார். தொடந்து வந்த டிக்வெல்லா (8) நீண்டநேரம் தாக்குபிடிக்கவில்லை. மாத்யூஸ் மட்டும் தனிஒருவனாக போராட, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து 446 ரன்கள் பின்தங்கியுள்ளது.

‘பாலோ-ஆன்’ எப்படி:
இப்போட்டியில் இலங்கை அணி, பாலோ-ஆனை தவிர்க்க, முதல் இன்னிங்சில் 400 ரன்கள் எடுக்க வேண்டும் அப்படி தவறும்பட்சத்தில் இந்திய கேப்டன் கோலி நினைத்தால் மீண்டும் இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைக்கலாம். அல்லது இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்து இமாலய இலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயிக்கலாம்

வெறும் 9 விக்கெட் மட்டும்:
இப்போட்டியில் விளையாடும் லெவன் அணியில் இடம் பெற்றிருந்த இலங்கை வீரர் குணரத்னேவின், பெருவிரல் எலும்பு முறிவு ஏற்பட்டதால், இந்திய அணி இலங்கை அணியின் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினாலே போதும். தற்போது 5 விக்கெட்டுகளை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றிவிட்டதால், நாளை எஞ்சியுள்ள 4 விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றினால், வெற்றி வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்