ஆப்நகரம்

தாதாவை கௌரவிக்கும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ்

உலகப் புகழ்பெற்ற ஈடன் கார்ட்ன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஸ்டாண்டுக்கு முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் பெயர் சூட்டப்பட உள்ளது.

TNN 20 Jan 2017, 6:37 pm
கொல்கத்தா: உலகப் புகழ்பெற்ற ஈடன் கார்ட்ன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஸ்டாண்டுக்கு முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் பெயர் சூட்டப்பட உள்ளது.
Samayam Tamil sourav ganguly will have a stand named after him at the eden gardens
தாதாவை கௌரவிக்கும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ்


இந்தியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ். இந்த மைதானத்தில் உள்ள ஸ்டாண்டுக்கு புதிய பெயர் சூட்டப்பட இருப்பதாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ஒரு ஸ்டாண்டுக்கு இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பெயர் சூட்டப்பட உள்ளது.

மேலும், முன்னாள் வீரர் பங்கஜ் ராய், பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் பி.என்.தத், ஏ.என்.கோஷ், எஸ்.ஆச்சார்யா மற்றும் ஜக்மோகன் டால்மியா ஆகியோரின் பெயரில் மற்ற ஸ்டாண்டுகள் அமைய உள்ளன.

கடந்த ஆறு மாதமாக இந்த பெயர் மாற்றத்திற்கான அனுமதி பெற காத்திருந்த நிலையில் இன்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதற்கு ஒப்பதல் அளித்துள்ளனர். அடுத்த சில நாட்களில் பெயர் மாற்றம் செய்வதற்கான பணிகள் ஆரம்பமாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கெனவே, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயரில் இரண்டு ஸ்டாண்டுகள் உள்ளன. டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் இரண்டு ஸ்டாண்டுகளுக்கு வீரேந்திர சேவக் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்