ஆப்நகரம்

4...6... அப்பிடின்னா என்னான்னு கேட்ட புனே: ஐதராபாத் அணிக்கு 149 ரன்கள் இலக்கு!

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், கடைசி நேரத்தில் தோனி கைகொடுக்க, புனே அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது.

TOI Sports 6 May 2017, 5:49 pm
ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், கடைசி நேரத்தில் தோனி கைகொடுக்க, புனே அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது.
Samayam Tamil srh need 149 runs to win against rps
4...6... அப்பிடின்னா என்னான்னு கேட்ட புனே: ஐதராபாத் அணிக்கு 149 ரன்கள் இலக்கு!


இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் ஐதராபாத்தில் நடக்கும் 44வது லீக் போட்டியில், ஐதராபாத், புனே அணிகள் மோதுகின்றன.

இதில் ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதில் ஐதராபாத் அணியில், நெஹ்ரா, பிபுல் சர்மா அணிக்கு திரும்பினர். புனே அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

திருப்பதி சொதப்பல்:
இதையடுத்து களமிறங்கிய புனே அணிக்கு, துவக்க வீரர் திருப்பதி (1) ஏமாற்றினார். ரகானே (22) ஓரளவு கைகொடுத்தார். பின் வந்த ஸ்மித் (34), ஸ்டோக்ஸ் (39) ஓரளவு கைகொடுத்தது.

தோனி மிரட்டல்:
பின் வந்த தோனி, வேகவேகமாக ரன்கள் சேர்த்தார். இவர் 21 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சர் என மொத்தமாக 31 ரன்கள் சேர்த்து அவுட்டானார். பின் வரிசை வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரன்கள் சேர்க்கவில்லை. இதையடுத்து புனே அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது.

ஐதராபாத் அணி சார்பில் காவுல் அதிகபட்சமாக 4 விக்கெட் கைப்பற்றினார்.

குறைவான ஸ்கோர்:
ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 20 ஓவரில் 148 ரன்கள் சேர்த்த புனே அணி, முதலில் பேட்டிங் செய்து குறைவான ரன்கள் சேர்த்தது.

6 சிக்சர்... 5 பவுண்டரி...:
ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில், பவுண்டரி, சிக்சர் அடிக்க புனே அணி, தட்டுத்தடுமாறியது. இந்த போட்டியில் மொத்தமே, புனே அணி, மொத்தமே 56 ரன்கள் (6 சிக்சர், 5 பவுண்டரி) சேர்த்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்