ஆப்நகரம்

ஐதராபாத்துக்கு வழிவிட அசால்ட்டா ’யூ டர்ன்’ போட்ட குஜராத்!

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், சூப்பராக துவங்கிய குஜராத் அணி, கடைசியில் சொங்கி மாதிரி முடித்தது.

TOI Sports 13 May 2017, 5:49 pm
கான்பூர்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், சூப்பராக துவங்கிய குஜராத் அணி, கடைசியில் சொங்கி மாதிரி முடித்தது.
Samayam Tamil srh need 155 runs to win against gl
ஐதராபாத்துக்கு வழிவிட அசால்ட்டா ’யூ டர்ன்’ போட்ட குஜராத்!


இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டெல்லியில் நடக்கும் 53வது லீக் போட்டியில், குஜராத், ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ஐதராபாத் அணியில் காயம் காரணமாக யுவராஜ் சிங்கிற்கு பதிலாக திபக் கூடா சேர்க்கப்பட்டார். இதே போல, குஜராத் அணியில், பசில் தாம்பிக்கு பதிலாக, பிரவீண் குமார், முனாப் படேல் இடம் பிடித்தனர்.

சூப்பர் துவக்கம்:
இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு, டுவைன் ஸ்மித், இஷான் கிஷான் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. ஐதராபாத் பந்துவீச்சை சர்வசாதரணமாக சமாளித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த போது, ஸ்மித் (54) அரைசதம் அடித்து அவுட்டானார்.

ரெய்னா ஏமாற்றம்:
பின் வந்த கேப்டன் ரெய்னா (2) வந்த வேகத்திலேயே வெளியேறினார். இஷான் கிஷான், 61 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் வேகத்தில் சிக்கினார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் (0), பின்ச் (2), பால்க்னர் (8) சங்வான் (0), சோனி (0) என சொல்லி வைத்தது போல சீட்டுக்கட்டாக சரிந்தனர்.

ஜடேஜா ஆறுதல்:
ஒருமுனையில் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் கடைசி வரை ரவிந்திர ஜடேஜா போராட, குஜராத் அணி, 19.2 ஓவரில் 154 ரன்களுக்கு 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்