ஆப்நகரம்

டி20 கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு எதிராக புதிய வரலாறு படைத்த இலங்கை அணி

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியுள்ளதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அந்த அணிக்கு எதிராக இலங்கை புதிய வரலாறு படைத்துள்ளது.

Samayam Tamil 8 Oct 2019, 12:15 am
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அங்கு 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டி தொடர்களில் பங்கேற்றுள்ளது.
Samayam Tamil ttsp


இதில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற, டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இத்தொடரின் இரண்டாவது போட்டி லாகூரில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்களை எடுத்தது. அந்த அணியின் பனுகா ராஜபக்ஷ 48 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளும் அடங்கும்.

183 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணி வீரர் இமாத் வாசிம் மட்டும் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார்.

இலங்கை அணி தரப்பில் பிரதீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 35 ரன்களில் இலங்கை வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் இத்தொடரையும் கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி டி20 தொடரை கைப்பற்றுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்