ஆப்நகரம்

துவைத்து தொங்கப்போட்ட தவன், ராகுல்... இலங்கைக்கு இமாலய இலக்கு!

புனே: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், ராகுல், தவன் அரைசதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது.

Samayam Tamil 10 Jan 2020, 8:44 pm
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டி-20 போட்டி இந்தூரில் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Samayam Tamil shikhar dhawan


இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டி-20 போட்டி புனேவில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மலிங்கா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

பந்த் நீக்கம்
இலங்கை அணியில் காயமடைந்த இஸ்ரூ உதனாவுக்கு பதில் ஏஞ்சலோ மாத்யூஸ் அணியில் சேர்க்கப்பட்டார். இதேபோல சந்தகன் லெவனில் இடம் பிடித்தார். குல்தீப் யாதவுக்கு பதில் சஹால் அணியில் சேர்க்கப்பட்டார். பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடித்தார். ஒரு வழியாக சொதப்பல் ரிஷப் பந்த் ஓரங்கட்டப்பட்டார். சிவம் துபேவுக்கு பதில் மணீஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டார்.

தவன் ஆறுதல்
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தவன், ராகுல் ஜோடி துவக்கம் அளித்தனர். இருவரும் போட்டி போட்டு இலங்கை பவுலர்களை பதம் பார்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்திருந்த போது தவன் (52) வெளியேறினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் (6) இரண்டாவது பந்திலேயே அவுட்டானார்.


கோலி ஏமாற்றம்
தொடர்ந்து அதிரடி காட்டிய ராகுல் (54) அரைசதம் கடந்து அவுட்டானார். பின் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் (4), கேப்டன் கோலி (26), வாஷிங்டன் சுந்தர் (0) அடுத்து அடுத்து அவுட்டாக இந்திய அணியின் ரன் வேகம் குறைந்தது. தொடர்ந்து வந்த சார்துல் தாகூர் கடைசி நேரத்தில் காட்டு காட்டுன்னு காட்ட, இந்திய அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. இலங்கை அணிக்கு சந்தகன் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்