ஆப்நகரம்

இந்தியா வைத்த வேட்டுக்கு, இலங்கைக்கு மருந்து போட்ட வெஸ்ட் இண்டீஸ்

இலங்கை அணி ஒரு வழியாக உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்று பெருமூச்சு விட்டுள்ளது.

TOI Sports 20 Sep 2017, 3:51 pm
இலங்கை அணி ஒரு வழியாக உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்று பெருமூச்சு விட்டுள்ளது.
Samayam Tamil sri lanka qualify for 2019 icc world cup
இந்தியா வைத்த வேட்டுக்கு, இலங்கைக்கு மருந்து போட்ட வெஸ்ட் இண்டீஸ்


அண்மையில் இலங்கைக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 போட்டி என அனைத்திலும் வென்று அசத்தியது. இந்த போட்டித் தொடரில், ஒருநாள் போட்டியில் 2 போட்டிகளிலாவது இலங்கை வெல்ல வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், தரவரிசையில் பின்னடைவு அடைந்து இலங்கை அணி உலகக் கோப்பை போட்டிக்கு நேரடி தகுதி பெற முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்படி இல்லையெனில், இலங்கைக்கு அடுத்து உள்ள விண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைப்பெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரை முழுவதுமாக வெல்ல வேண்டும். அப்படி வெல்லும் பட்சத்தில் ஒருநாள் தொடர் தரவரிசையில் 8வது இடத்தை பிடிக்கும். விண்டீஸ் அணிக்கு நேரடி வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று நடந்த விண்டீஸ் அணி எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இலங்கை அணி உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்