ஆப்நகரம்

Sri Lanka vs England: நம்பர் 1 அணி இங்கிலாந்துக்கு எதிரான 366 ரன்களை குவித்த இலங்கை

நம்பர் 1 இங்கிலாந்தை 5வது ஒருநாள் போட்டியில் அடித்து நொறுக்கிய இலங்கை அணி 366 ரன்களை குவித்துள்ளது.

Samayam Tamil 23 Oct 2018, 7:39 pm
கொழும்பு : இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 366 ரன்களை குவித்துள்ளது.
Samayam Tamil SLvENG


இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள், ஒரு டி20, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் 4 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 3-0 என முன்னிலை வகிக்கின்றது. முதல் போட்டி மழை காரணமாக முடிவு கிடைக்கவில்லை.

366 ரன்கள் குவிப்பு:
5வது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது.
இலங்கையின் டிக்வெல்லா 95, சமரவிக்ரமா 54, தினேஷ் சாண்டிமல் 80, குசல் மெண்டிஸ் 56, என வரிசையாக சிறப்பாக விளையாடி ரன்களை குவிக்க 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 366 ரன்களை இலங்கை குவித்துள்ளது.

நம்பர் 1 அணி :
ஒருநாள் போட்டியின் தரவரிசையில் இங்கிலாந்து அணி நம்பர் 1 இடத்தில் உள்ளது. அதைக்காப்பாற்றிக் கொள்ளும் வகையில் சிறப்பாக விளையாடி 3-0 என ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இறுப்பினும் 2வதாக களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி 7 ஓவரில் 3 விக்கெட் வீழ்ந்து 28 ரன்கள் மட்டும் எடுத்து திணறி வருகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்