ஆப்நகரம்

இது வெறும் ஆரம்பம் தான் டா...: ‘டான்’ ரோகித் சர்மா!

இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய கவுரவம் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

TOI Sports 16 Aug 2017, 7:10 pm
பல்லேகலே: இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய கவுரவம் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sri lanka vs india 2017 it is a huge honour to be appointed as the vice captain rohit sharma
இது வெறும் ஆரம்பம் தான் டா...: ‘டான்’ ரோகித் சர்மா!


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்தது போல தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

எதிர்வரும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களுக்காக இந்திய கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ., திட்டமிட்டிருந்தது. ஆனால் கோலி, நான் நிச்சயமாக விளையாடுவேன் என தெரிவித்ததை தொடர்ந்து கேப்டன் பொறுப்புக்காக தேர்வு செய்யப்பட்ட ரோகித் சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில்,’சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணிக்காக விளையாடினால் போதும் என்று நினைத்தேன், ஆனால் தற்போது துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். எப்போதும் புதிய வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்த விரும்புவேன். அதேபோலத்தான் இந்த வாய்ப்பையும் பார்க்கிறேன். வரும் 20ம் தேதி முதல் எனக்கு வேலை வந்துவிட்டது. அதனால் இந்த தருணங்களை ரசித்து விளையாட திட்டமிட்டுள்ளேன். ஐபிஎல்., போட்டிகளும் சர்வதேச போட்டிகளும் வித்தியாசம் என்றாலும் மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்டவிதம் நிச்சயம் கைகொடுக்கும் என நம்புகிறேன்.’ என்றார்.

Rohit Sharma did not get to play in the Test series and is keen to make amends in the five-match ODI series starting on Sunday.

அடுத்த செய்தி

டிரெண்டிங்