ஆப்நகரம்

SL vs BAN: ‘2 வித்தியாசமான’…உலக சாதனைகளை படைத்த வங்கதேசம்: தரமான ரெக்கார்ட்தான்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி மூலம் இரண்டு வித்தியாசமான உலக சாதனையை வங்கதேச அணி படைத்துள்ளது.

Samayam Tamil 25 May 2022, 1:07 pm
வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டி டிரா ஆன நிலையில், தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil வங்கதேசம் vs இலங்கை


வங்கதேசம் இன்னிங்ஸ்:

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பிட்ச் துவக்கத்தில் வேகத்திற்கு சாதகமாக தாறுமாறாக ஸ்விங், பவுன்ஸ் ஆனதால், வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. இதனால் முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் முகமதுல் ஹசன் ஜோய் 0 (2), தமிம் இக்பால் 0 (4), சாண்டோ 8 (21), மமிமுல் 9 (9), ஷகிப் அல் ஹசன் 0 (1) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர்.

மெகா பார்ட்னர்ஷிப்:

வங்கதேச அணி 24/5 எனத் திணறி வந்தது. இதனால், வங்கதேச அணி 60 ரன்களை தொடுவதே பெரிய விஷயம் எனக் கருதப்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து முஷ்பிசுர் ரஹீம், லிடன் தாஸ் இருவரும் மிகப்பெரிய பிரமாண்டமான பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இருவரும் சதம் கடந்து, இலங்கை பௌலர்களை சிறப்பாக எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் லிடன் தாஸ் 246 பந்துகளில் 16 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 141 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ரஹூம் 355 பந்துகளில் 21 பவுண்டரிகள் உட்பட 175 ரன்கள் சேர்த்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதனால், 24/5 என இருந்த வங்கதேச அணி 296/6 ரன்னில்தான் எடுத்த விக்கெட்டை விட்டுக்கொடுத்தது.

அடுத்து வேறு எந்த வீரரும் சிறப்பாக செயல்படவில்லை. வங்கதேச அணி இறுதியில் 365/10 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. 6 பேர் டக் அவுட் ஆனார்கள்.

வங்கதேச அணி 2 சாதனைகள்:

ஒரு அணி 25 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்த பிறகு, 300 ரன்களை கடந்ததே கிடையாது. வங்கதேச அணி இதனை சாத்தியப்படுத்தியுள்ளது. அதேபோல் ஒரு இன்னிங்ஸில் 6 பேர் டக் அவுட் ஆகி, இரண்டு பேர் சதம் அடித்திருப்பதும் இதுதான் முதல்முறை.

இலங்கை இன்னிங்ஸ்:

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கியுள்ள இலங்கை அணி தற்போதுவரை 210/4 ரன்கள் சேர்த்து, 155 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஓபனர்கள் பெர்ணான்டோ 57 (91), கருணரத்னே 80 (155) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். தற்போது மேத்யூஸ் 25 (76), தனஞ்ஜெயா டி சில்வா 30 (40) ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்