ஆப்நகரம்

இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி

இந்தியாவுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Samayam Tamil 19 Nov 2016, 9:16 am
விஜயவாடா : இந்தியாவுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Samayam Tamil stafanie taylor pyrotechnics blow india women away
இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி


3 ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்று அசத்தியது. அதை தொடந்து நேற்று 3 டி20 போட்டிகளுக்கான தொடர் தொடங்கியது.

முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் வனிதா 3, ஸ்மிரிதி 11 என அடுத்தடுத்து வெளியேறினர்.

அதன் பின் கைகோர்த்த வேதா கிருஷ்ணமூர்த்தி 50 ரன்கள் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 68 ரன்கள் எடுத்து அசத்தினர். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணியின் தொடக்கவீரர் ஹய்லே 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேபடனுமான ஸ்டபானி டெய்லர் 51 பந்துகளில் 90 ரனகள் விளாசி அவுடானார். அதன் பின் பிரிட்னி 16, மெரிசா 15, டிண்ட்ரா 11 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவரில் 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்