ஆப்நகரம்

அம்பயர்கள் அராஜகம் தாங்க முடியல! புலம்பும் கிரிக்கெட் வீரர்கள்!

ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் மாற்றம் கொண்டுவருவது பற்றி விவாதிப்பதற்கான பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர்கள் அம்பயர்கள் மோசமாக செயல்படுவதாக ஒருமித்த குரலில் புகார் கூறியுள்ளனர்.

TNN 24 May 2017, 2:50 pm
ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் மாற்றம் கொண்டுவருவது பற்றி விவாதிப்பதற்கான பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர்கள் அம்பயர்கள் மோசமாக செயல்படுவதாக ஒருமித்த குரலில் புகார் கூறியுள்ளனர்.
Samayam Tamil standard of umpiring heavily criticised by players in bcci meet
அம்பயர்கள் அராஜகம் தாங்க முடியல! புலம்பும் கிரிக்கெட் வீரர்கள்!


ரஞ்சிக்கோப்பை போட்டிகளுக்கான ஆடுகளங்கள் ஒரு அணிக்கு சாதகமாக அமைவதைத் தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு அணியும் சொந்த மைதானத்தில் ஒரு ஆட்டமும் எதிர் அணிகளின் மைதானத்தில் மற்றொரு ஆட்டமும் என விளையாடுடம் முறையை அமல்படுத்துவது குறித்த விவாதம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, ஆலோசிப்பதற்கான பிசிசிஐ சிறப்புக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெற்றது. இதில் முதல்தர போட்டிகளுக்கான உள்நாட்டு கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களும் பயிற்சியாளர்களும் பங்கேற்றனர். பிசிசிஐ தற்காலிக தலைவரான சி.ஹெச்.கண்ணா உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டனர்.



ரஞ்சிக்கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணிலும் எதிரணியின் இடத்திலுமாக விளையாடும் முறைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. போட்டிகளுக்கிடையே அதிக அலைச்சல் இருக்கும் என்றாலும், ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்க இந்த மாற்றம் தேவை என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் அம்பயர்களின் செயல்பாடு பற்றியும் வீரர்கள் ஒருமித்த குரலில் புகார் கூறினர். ரஞ்சிக்கோப்பை உள்ளிட்ட முதல்தர போட்டிகளிலும் நடந்துமுடிந்த ஐபில் தொடரிலும் அம்பயர்களின் செயல்பாடு மோசமானதாக இருந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், பார்த்திவ் படேல், முகமது கைப் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றிருந்த இக்கூட்டத்தில், பிசிசிஐ தொழில்நுட்பக் குழுவின் தலைவராக உள்ள சவுரவ் கங்குலி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்