ஆப்நகரம்

ஆளவிடுங்க சார் : தெரித்து ஓடிய ஸ்டார்க்!

பெங்களூரு அணியுடனான தனது ஒப்பந்தத்தை முடித்து கொள்வதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

TOI Sports 19 Feb 2017, 5:17 pm
புதுடில்லி: பெங்களூரு அணியுடனான தனது ஒப்பந்தத்தை முடித்து கொள்வதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil starc pulls out of ipl ends association with rcb
ஆளவிடுங்க சார் : தெரித்து ஓடிய ஸ்டார்க்!


இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,). இதில் இந்திய நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பதால், ரசிகர்கள் மத்தியில் இத்தொடருக்கான வரவேற்பு எப்போதும் எகிறியே காணப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்., அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு ([பி.சி.சி.ஐ.,) சமீபத்தில் வெளியிட்டது. வரும் ஏப்ரம் 5ல் துவங்கும் இதன் முதல் போட்டி மே 21 வரை நீடிக்கிறது. 47 நடக்கும் இத்தொடரில் மொத்தம் 60 போட்டிகள் நடக்கிறது.

இத்தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க். இவர் இந்த ஆண்டு நடக்கவுள்ள போட்டிகளில் பங்கேற்கமுடியாது என அணியுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதை அணி நிர்வாகமும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

NEW DELHI: Australian pace spearhead Mitchell Starc has pulled out of this year's Indian Premier League season, ending his association with his franchise Royal Challengers Bangalore.

அடுத்த செய்தி

டிரெண்டிங்