ஆப்நகரம்

நாங்க கள்ளாட்டம் ஆடுனோமா?: டிஆர்எஸ் பிரச்சனை குறித்து ஸ்மித் விளக்கம்

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலிய அணி டிஆர்எஸ்ஸை தவறாகப் பயன்படுத்தியது என்ற விராத் கோலியின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்

TOI Sports 27 Oct 2017, 5:38 pm
தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலிய அணி டிஆர்எஸ்ஸை தவறாகப் பயன்படுத்தியது என்ற விராத் கோலியின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
Samayam Tamil steve smith dismisses virat kohlis drs claims as rubbish
நாங்க கள்ளாட்டம் ஆடுனோமா?: டிஆர்எஸ் பிரச்சனை குறித்து ஸ்மித் விளக்கம்


கடந்த பிப்ரவரி மாதம், ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தொடரின்போது, ஆஸ்திரேலிய அணி டிஆர்எஸ் முடிவுகளை எடுக்க டிரஸிங் ரூம் உதவியைப் பெறுவதாக இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி குற்றம் சாட்டினார். இதையடுத்து, இரு அணிகளும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,”இந்தியா உடனான டெஸ்ட் தொடரின் போது எழுந்த பிரச்சனைகள் ஒரு தலைப் பட்சமாக பார்க்கப்பட்டன. எனக்குத் தெரிந்தவரையில் ஆஸ்திரேலிய அணி டிஆர்எஸ் முடிவுகளை எடுக்க டிரஸிங் ரூமின் உதவியைப் பெறவில்லை.

மேலும், வேட் மற்றும் ஜடேஜா இடையேயான பிரச்சனையை யாரும் பேசவில்லை. அந்தத் தொடரில் இந்திய வீரர்கள் எங்களை வேண்டுமென்றே சீண்டினார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

Steve Smith dismisses Virat Kohli's DRS claims as 'rubbish'

அடுத்த செய்தி

டிரெண்டிங்