ஆப்நகரம்

பங்காளிகளான பாசக்கார பகையாளிகள் : ஸ்டோக்ஸ்!

சர்வதேச அணிக்காக விளையாடும் போது மட்டுமே தோனி, ஸ்மித் பகையாளிகள் தற்போது அவர்கள் பாசக்கார பங்காளிகளாக செயல்படுவதாக ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

TOI Sports 16 May 2017, 2:31 pm
புனே: சர்வதேச அணிக்காக விளையாடும் போது மட்டுமே தோனி, ஸ்மித் பகையாளிகள் தற்போது அவர்கள் பாசக்கார பங்காளிகளாக செயல்படுவதாக ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil steve smith ms dhoni worked really well together ben stokes
பங்காளிகளான பாசக்கார பகையாளிகள் : ஸ்டோக்ஸ்!


இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுகளுக்கு மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இதில் புனே அணி, ஆரம்பத்தில் அடிமட்டத்தில் இருந்த போது, சீனியர் வீரர்களின் சீற்றத்தால் உச்சிக்கு உயர்ந்தது. இதற்கு அந்த அணியின் தோனி, ஸ்மித், ஸ்டோக்ஸ், உள்ளிட்ட சீனியர் வீரர்களின் ஒத்துழைப்பே காரணம். அணி நிர்வாகமே அசிங்கப்படுத்திய போதும் அதை கொஞ்சம் கூட தலைக்கு ஏற்றிக்கொள்ளாத ‘தல’ தோனி, சுதந்திரம் கொடுத்த ஸ்மித், சொல்லி அடித்த ஸ்டோக்ஸ் ஆகியோரின் தியாகம் இந்த இடத்துக்கு செல்ல புனே அணிக்கு உறுதுணையாக அமைந்தது.

இந்நிலையில் காயம் காரணமாக வெளியேறும் ஸ்டோக்ஸ் கூறுகையில்,’ போட்டிக்கு பின் தோனி தனது ரூமின் கதவை எப்போதுமே திறந்து தான் வைத்திருப்பார். யார் வேண்டுமானாலும் தயங்காமல் உள்ளே செல்லலாம். அதே போல களத்திலும் தோனியின் அமைதியான முகமே அத்தனை கதைகளையும் சொல்லிவிடும். ஸ்மித் கேப்டனாக இருந்த போதும் பொறுத்தமான இடத்திற்கு பீல்டர்களை தோனி மாற்றி அமைப்பார். அவர்களுக்கு எந்த ஈகோவும் இல்லை. பகையாளிகளாக இருந்தாலும் தற்போது அவர்கள் பாசக்கார பங்காளிகள்,’ என்றார்.

“On the field, MS epitomises calmness and, from a cricket point of view, has the best angle in terms of field placements. Obviously, Steve’s the captain, but he’s aware that MS has the best angle and, so, has worked with him in setting fields. Indeed, Steve and MS have worked really well together,” he added.

அடுத்த செய்தி

டிரெண்டிங்