ஆப்நகரம்

‘டபுள் மாஸ்’ இருக்கு.... : திரும்பி வருகிறாரா சின்ன ‘தல’ ரெய்னா!

புதுடெல்லி: அடுத்ததடுத்து இரண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்கள் வரவுள்ளதால், இந்திய அணியின் தற்போதைய மிகப்பெரிய கேள்விக்கு தான் விடையாக இருப்பேன் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Sep 2019, 11:46 am
இந்திய கிரிக்கெட் அணியின் ‘மிடில் ஆர்டர்’ பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. தனது மோசமான பார்ம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தை பறிகொடுத்தார். இந்நிலையில் தற்போது முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.
Samayam Tamil Suresh Raina


அடுத்தடுத்து உலகக்கோப்பை....
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் (2020) டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அதை தொடர்ந்து வரும் 2021ல் இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

கிரிக்கெட்டை போலவே இதுலயும் தெறி ‘மாஸ்’ காட்டுவாரா ... ‘தல’ தோனி...!

ஐ ஆம் பேக்...
இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரெய்னா கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெற்றிடமான 4வது இடத்தில் நான் ‘பேட்டிங்’ செய்வேன். முன்னதாக அந்த இடத்தில் நான் களமிறங்கி சாதித்துள்ளேன். அடுத்ததடுத்து இரண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரவுள்ளதால் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெற முயற்சிப்பேன்.

டிசம்பரில் நடக்கிறதா ஐபிஎல் 2020 மினி ஏலம்?

குழப்பவாதி பந்த்...
இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், நிச்சயம் திறமையான வீரர் தான். அவரின் திறமை மீது அதிக நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்போது அவரைப்பார்க்கும் போது மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது. அவர் அவரின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.


தோனி ஸ்டைலில்...
அவரின் ஆட்டத்துக்கு மாறாக ஒருரன் அடித்த முயற்சிப்பதால் தான் இந்த குழப்பம் ஏற்படுகிறது. அவருடன் அமர்ந்து யாராவது சீனியர்கள் பேசினால் இதற்கு நல்ல தீர்வு காண முடியும். இதை தோனி கேப்டனாக இருந்த போது சிறந்த முறையில் செய்தார்.

டேய் தம்பி.... கொஞ்சமாவது மூளையை ‘யூஸ்’ பண்ணுடா...: சாய்னியை சைகையில் திட்டிய ‘டான்’...!

மனோபலம்...
கிரிக்கெட் என்பது எப்போதும் ஒரு மனோபலம் கொண்ட விளையாட்டு. தற்போது பந்த் தனக்கு கொடுத்த தகவலின் படி விளையாடி வருகிறார். அது சுத்தமாக கைகொடுக்கவில்லை. இதை கண்டிப்பாக மாற்றவேண்டும்.

தோனி தேவையா....
தோனி தற்போது முழு உடற்தகுதியுடன் தான் உள்ளார். மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் மிகச்சிறந்த பினிஷர். கண்டிப்பாக டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தோனி இருந்தால் இந்திய அணியின் பலம் அதிகரிக்கும். ’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்