ஆப்நகரம்

சொந்த ஊரில் தடுமாறிய கொல்கத்தா : புனேவுக்கு 156 ரன்கள் இலக்கு

புனே அணிக்கு எதிரான போட்டியில் தட்டுத் தடுமாறி கொல்கத்தா அணி 155 ரன்களை எடுத்துள்ளது.

TOI Sports 3 May 2017, 9:45 pm
கொல்கத்தா : புனே அணிக்கு எதிரான போட்டியில் தட்டுத் தடுமாறி கொல்கத்தா அணி 155 ரன்களை எடுத்துள்ளது.
Samayam Tamil suryakumar cameo lifts kkr to 155
சொந்த ஊரில் தடுமாறிய கொல்கத்தா : புனேவுக்கு 156 ரன்கள் இலக்கு


10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 41வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணிக்கும் இடையே கொல்கத்தாவில் நடைப்பெறுகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, புனேவின் உனத் கட் வீசிய முதல் 2 ஓவரை எதிர்கொள்ள திணறியது.
உனத்கட் பந்தில் சுனில் நரேன் ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றினார். தடுமாறி விளையாடிய கம்பிர் 24, ஷெல்டன் ஜாக்சன் 10 ரன்கள், மணிஷ் பாண்டே 37, யூசப் பதான் 4 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

பின்னர் வந்த கிராண்ட் ஹோமி 19 பந்தில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி அடித்து 36 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 16 பந்தில் 2சிக்ஸ், 2 பவுண்டரி விளாசி 30 ரன்களும் குவித்தனர்.

பின்வரிசை வீரர்கள் கிறிஸ் வோக்ஸ் 1, கூல்டர் நைல் 6, உமேஷ் யாதவ் 2 ரன்கள் எடுத்தனர்.

புனேவின் உனத்கட் 4 ஓவரில் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாசிங்டன் சுந்தர் 2 ஓவரில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் சாய்த்தார். ஸ்டோக்ஸ்,தாகிர், கிறிஸ்டியன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்