ஆப்நகரம்

MS Dhoni Sequel : தோனியின் பிறந்த நாள் பரிசு.. தோனி படத்தின் 2ஆவது பாகம்... விரைவில்!

தோனியின் வாழ்க்கை வரலாறு 'எம்.எஸ்.தோனி - த அன்டோல்டு ஸ்டோரி' என்ற பெயரில் படம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் அந்த படத்தின் 2வது பாகம் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 7 Jul 2018, 3:19 pm
தோனியின் வாழ்க்கை வரலாறு 'எம்.எஸ்.தோனி - த அன்டோல்டு ஸ்டோரி' என்ற பெயரில் படம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் அந்த படத்தின் 2வது பாகம் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil sushant-dhoni


கடந்த 2016ல் வெளியான 'எம்.எஸ்.தோனி - த அன்டோல்டு ஸ்டோரி' படத்தில் தோனியின் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், கிரிக்கெட்டில் உலகக் கோப்பை வென்றது வரை காட்டப்பட்டிருந்தது. இந்த படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

2வது பாகம் :
ஒருவரின் வாழ்க்கை வரலாறு படம் என்றால் அது அவரின் முழு வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கும். ஆனால் தோனி படத்தில் பாதி அளவு எடுக்கப்பட்டுள்ளது. அதோடு தோனி இன்னமும் விளையாடி வருகின்றார்.

இதனால் தோனி படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 2011 உலகக் கோப்பைக்கு பின்னர், 2015 உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பையின் போது அவர் விளையாடியது, அவரின் வாழ்க்கை சம்பவங்கள், முன்பு விடுபட்ட முக்கிய நிகழ்வுகளை இணைத்து தோனி படத்தின் 2வது பாகம் படம் எடுக்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிறந்தநாள் பரிசு :
இன்று தல தோனி தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரின் பிறந்த நாள் கொண்டாட்டம், ரசிகர்களுக்கும் தித்திக்கும் வகையில், தோனி படத்தின் 2வது பாகம் தயாரிக்கப்போகின்ற தகவல் கொடுத்துள்ளது.

முதல் பாகத்திலும் தோனியாக நடித்திருந்த சுசாந்த் சிங் ராஜ்புட், 2வது பாகத்திலும் நடிப்பார் என தெரிகிறது. இந்த படத்திற்கான திரைக் கதை தயார்ப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்