ஆப்நகரம்

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள்... இந்தியாவுக்கு மெடல் நிச்சயம்!

ஒலிம்பிக் விளையாட்டில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

Samayam Tamil 24 Apr 2021, 7:45 pm
உலகில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் மிகப் பெரிய இலக்காக இருப்பது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வாங்க வேண்டும் என்பதுதான். அது சாதாரண விஷயம் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில், ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கப் பதக்கத்தையாவது வாங்க வேண்டும் என்ற குறிக்கோளில் வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். இந்தியா பதக்கம் வாங்குவது சிரமமாக இருக்கும் நிலையில், கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்த்தால் கட்டாயம் தங்கம் வெல்லும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. விரைவில் அது நனவாகப்போகிறது.
Samayam Tamil cricket


ஒலிம்பிக் விளையாட்டில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கான ஆலோசனையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் ஒலிம்பிக் கமிட்டியும் ஈடுபட்டுள்ளன. ஒலிம்பிக் விளையாட்டில் கிரிக்கெட்டைச் சேர்க்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், டி-10 போட்டியைச் சேர்ப்பதா அல்லது டி-20 போட்டியைச் சேர்ப்பதா என்ற விவாதம்தான் தற்போது சூடுபிடித்துள்ளது. ஒலிம்பிக் கமிட்டி தரப்பில் டி-10 போட்டியைச் சேர்க்க பரிந்துரைகள் வந்துள்ளன. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்னும் அதற்குத் தயாராகவில்லை. ஏனெனில், டி-10 போட்டிகள் இன்னும் பிரபலமாகவில்லை. சர்வதேச அளவில் இதற்கான தொடர்களும் இன்னும் நடத்தப்படவில்லை.

யார்க்கர் பந்துக்கு இன்னும் மவுசு இருக்கா?
ஒலிம்பிக் கமிட்டியிடமிருந்து கிடைத்த தகவலின்படி, 2028ஆம் ஆண்டுக்கு முன்பாக ஒலிம்பிக் விளையாட்டில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதைத் தாண்டியே கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. டி-10 போட்டிகள் மிக விரைவாக 90 நிமிடங்களில் முடிந்துவிடும் என்பதால் ஒரே நாளில் அதிகப் போட்டிகள் நடத்தலாம். அதேபோல, அதிக அணிகளும் பங்கேற்று விளையாடலாம் என்று ஒலிம்பிக் கமிட்டி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், டி-20 போட்டிகள்தான் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று இன்னொரு தரப்பு கூறுகிறது.

டி-10 போட்டியை ஒலிம்பிக்கில் சேர்ப்பதாக இருந்தால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2024ஆம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் இதற்கான தொடர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அது சற்று சிரமமான ஒன்றுதான். எனவே ஒலிம்பிக் விளையாட்டில் டி-20 போட்டியைச் சேர்ப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக உள்ளன. 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அப்போது இந்தியாவுக்கும் கண்டிப்பாக ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்