ஆப்நகரம்

ஆஸி.,யின் உலக சாதனையை தூசியாக்கிய இந்திய அணி!

ராஜ்கோட்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், வெற்றி பெற்ற இந்திய அணி, டி-20 அரங்கில் ஆஸ்திரேலிய அணியின் உலக சாதனையை தகர்த்தது.

Samayam Tamil 8 Nov 2019, 10:56 am
வங்கதேச அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை இந்திய அணி ஓரங்கட்டியது.
Samayam Tamil rohit-sharma


41வது வெற்றி....
இந்நிலையில் சர்வதேச டி-20 அரங்கில் இந்திய அணி, ஷேசிங்கின் போது பெற்ற 41வது வெற்றியாக இது அமைந்தது. இதன் மூலம் டி-20 அரங்கில் சேஷிங்கில் அதிக வெற்றிகளை பதிவு செய்த ஆஸ்திரேலிய அணியின் உலக சாதனையை (40 வெற்றி) இந்திய அணி ஓரங்கட்டியது.

தாறுமாறா துவைத்து தொங்கவிட்ட ‘டான்’ ரோஹித்....: தொடரை சமன் செய்த இந்திய அணி!

61ல் 41....
தவிர, இந்திய அணி இதுவரை டி-20 அரங்கில் 61 முறை ஷேசிங்கில் ஈடுபட்டு 41 முறை வெற்றிகரமாக இலக்கை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் 69ல் 40 முறை வென்றுள்ளது. இப்பட்டியலில் பாகிஸ்தான் அணி 36 வெற்றிகள் (67 போட்டிகள்) மூன்றாவது இடத்தில் உள்ளது.

கவாஸ்கர், கபில் தேவுக்கு பின் இந்த பெருமை பெற்ற முதல் இந்தியர் ‘டான்’ ரோஹித் ஷர்மா!

வெற்றி சதவீதம்...
இதில் ஆஸ்திரேலியாவின் அதிக வெற்றிகளை மட்டும் இந்திய அணி ஓரங்கட்டவில்லை. ஷேசிங் என்று வரும் போது ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி வெற்றி சதவீதத்திலும் சிறந்த அணியாக திகழ்கிறது. இப்போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா 43 பந்தில் 85 ரன்கள் விளாசி மிரட்டினார். இரு அணிகள் மோதும், கடைசி டி-20 போட்டி வரும் 10ம் தேதி, நாக்பூரில் நடக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்