ஆப்நகரம்

மனைவி அனுஷ்காவுடன் சுவிட்சர்லாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கிங் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சுவிட்சர்லாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார்.

Samayam Tamil 29 Dec 2019, 4:39 pm
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுமுறை நாட்களை தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் செலவிட்டு வருகிறார். இந்த ஜோடி கிறிஸ்துமஸை கொண்டாட சுவிட்சர்லாந்து சென்றுள்ளது.
Samayam Tamil Virat Kohli - Anushka Sharma


பகிர்ந்த கோலி
இதுதொடர்பாக கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில் கிறிஸ்துமஸ் ஈமோஜியுடன் உயர்ந்த பனிமலைகள் பிண்ணனியில் இருப்பது போல கோலி அனுஷ்கா ஷர்மா போஸ் கொடுத்துள்ளனர். இதேபோல அனுஷ்கா ஷர்மாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

எங்கு சென்றாலும்
கடந்த 2017இல் அனுஷ்கா சர்மாவை, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய பின், விராட் கோலி தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

பிஸியாக உள்ள போதும்
அப்போது கோலி - அனுஷ்கா ஜோடி பூட்டான் சென்றனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. கோலி, அனுஷ்கா சர்மா இருவரும் தங்களில் பணிகளில் அதிக பிஸியாக உள்ள போதும், அவ்வப்போது கிடைக்கும் விடுமுறைகளில் ஒன்றாக பொழுதைப் போக்கிவருகின்றனர்.

View this post on Instagram ❄️⛷😃 A post shared by Virat Kohli (@virat.kohli) on Dec 28, 2019 at 7:33am PST

தவிர, இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் தொடர்களில் பங்கேற்றாலும் அனுஷ்கா சர்மா தவறாமல் அங்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்ற போதும் அனுஷ்கா சென்றிருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்