ஆப்நகரம்

Brian Lara: இந்தியாவின் ஸ்டைல் சூப்பர் ஸ்டார்... கிரிக்கெட் கிறிஸ்டியானோ இவங்க தான்: லாரா!

விசாகப்பட்டினம்: விராட் கோலி கால்பந்து ஹீரோவான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கிரிக்கெட் வெர்ஷன் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா. சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த இடது கைபேட்ஸ்மேனாக திகழ்ந்த லாரா, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் திறமை நம்ப முடியாத அளவில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Dec 2019, 4:49 pm

Samayam Tamil team india captain virat kohli is cricketing version of cristiano ronaldo says brian lara
Brian Lara: இந்தியாவின் ஸ்டைல் சூப்பர் ஸ்டார்... கிரிக்கெட் கிறிஸ்டியானோ இவங்க தான்: லாரா!

ரொனால்டோ வெர்ஷன்

இதுகுறித்து லாரா கூறுகையில், “கிரிக்கெட்டில் பங்கேற்க தயாராகும் விதத்தை தவிர்த்து, விராட் கோலியின் நம்பமுடியாத கமிட்மெண்ட் தான் அவரின் திறமைக்கு முக்கிய காரணமாக உள்ளது. கோலியைப்போலவே கே.எல் ராகுல், ரோஹித் ஷர்மாவும் மிகத்திறமையானவர்கள் தான்.

இதென்ன கிரிக்கெட்டாடா... என்ன நடக்குது இங்க: செம்ம காண்டான ‘கிங்’ கோலி!

எல்லாமே 50

என்னைப்பொறுத்தவரையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கிரிக்கெட் வெர்ஷன் தான் கோலி. கோலியின் உடல் ஆரோக்கியமான நிலை மற்றும் மனநிலை நம்ப முடியாத அளவில் உள்ளது.

மரண காட்டு காட்டிய ஹெட்மயர், ஹோப்... திக்குமுக்காடிய பவுலர்கள்: மண்ணைக்கவ்விய இந்திய அணி!

ஸ்டைலில் சூப்பர் ஸ்டார்

கோலியின் பேட்டிங் திறமை நம்ம முடியாத அளவில் உள்ளது. அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் 50 சராசரி வைத்துள்ளார். இது சர்வதேச கிரிக்கெட்டில் அறிதான விஷயம். நுணுக்கமான ஆட்டத்தில் கோலி சிறப்பாக செயல்படுகிறார். இருந்தாலும் ஸ்டைல் என வரும் போது ராகுலின் ஆட்டத்தை நாள் முழுதும் ரசித்துப் பார்க்கலாம்” என்றார்.

பென் ஸ்டோக்ஸ் பெஸ்ட்

இதேபோல இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸையும் லாரா பாராட்டினார். இதுகுறித்து லாரா கூறுகையில், “உலகக்கோப்பை மற்றும் அஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மிகக் கடினமான காலத்தில் இருந்து வெளியே வந்தவர் ஸ்டோக்ஸ். இது சாதாரண விஷயமல்ல” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்