ஆப்நகரம்

கருத்து சொன்ன இஷாந்த்... ஆமா இது எங்களுக்கு தெரியாது பாரு... செம்ம கலாய் கலாய்த்துவிட்ட கிங் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்த கேப்டன் விராட் கோலி அவரை பங்கமாக கலாய்த்துள்ளார்.

Samayam Tamil 12 Jan 2020, 6:51 pm
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா. டெஸ்ட் கிரிக்கெட்டில் நிரந்தரமான இடம் பிடித்துள்ள இஷா ந்த் அடுத்து நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாதிக்க தயாராகி வருகிறார். தற்போது போட்டிகள் இல்லாத காரணத்தால் ஓய்வில் உள்ள இஷாந்த் சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil Virat Kohli


கருத்து
அதில், “நீங்கள் ஒரே ஒருமுறை தான் வாழப்போகிறீர்கள்” என தனது போட்டோவை வெளியிட்டுள்ளார். இஷாந்த் சர்மாவின் இந்த பதிவைப் பார்த்த கேப்டன் விராட் கோலி, காமெடியாக பதில் அளித்துள்ளார். அதில், “ஆமா இது எங்களுக்கு தெரியாது பாரு” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த இஷாந்த், “கிண்டல் பண்ணாத” என பதில் அளித்தார்.

View this post on Instagram you only live once 🤙 A post shared by Ishant Sharma (@ishant.sharma29) on Jan 11, 2020 at 6:03am PST


சிறந்த பவுலிங்
இஷாந்த் ஷர்மா கடைசியாக இந்தியாவில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்றார். இத்தொடரில் பவுலிங்கில் அசத்திய இஷாந்த் ஷர்மா அதிகபட்சமாக 12 விக்கெட் வீழ்த்தினார். கோலி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்து மிரட்டினார். அடுத்து இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதிலும் விராட் கோலி தனது ரன் வேட்டையை தொடர்வார் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்