ஆப்நகரம்

சேவக் சரிப்பட மாட்டாரு... சாஸ்திரிக்கு சான்ஸ்!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சேவக் உள்ளிட்ட மற்ற வீரர்களின் விண்ணப்பங்களை பிசிசிஐ நிராகரித்தது.

TOI Sports 11 Jul 2017, 4:58 pm
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சேவக் உள்ளிட்ட மற்ற வீரர்களின் விண்ணப்பங்களை பிசிசிஐ நிராகரித்தது.
Samayam Tamil team india coach ravi shastri appointed as team india coach
சேவக் சரிப்பட மாட்டாரு... சாஸ்திரிக்கு சான்ஸ்!


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் சென்ற, இந்திய அணி 5 ஒருநாள், 1 டி-20 போட்டிகளில் பங்கேற்றது. இதில் தலைமை பயிற்சியாளர் இல்லாமல் சென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை வென்ற போதும், டி-20 போட்டியில் தோல்வியை சந்தித்தது.

இத்தொடருக்கு முன்னதாக, இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் கும்ளே இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவியது. ஒருவழியாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை தாக்குபிடித்த கும்ளே, தற்போது தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் பின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் தீவிரத்தில் பிசிசிஐ இறங்கியது. இந்நிலையில் இந்த பயிற்சியாளருக்கான தேர்வு போட்டியில், முன்னாள் அதிரடி துவக்க வீரர் சேவக் உள்ளார். இவரை தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஐதராபாத் அணியின் தற்போதைய பயிற்சியாளரான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி இருந்தார்.

இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நிலவ, பிசிசிஐ., ரவி சாஸ்திரியை களமிறக்கியது. ஆனால், ஏற்கனவே இந்திய அணியின் இயக்குனராக இருந்த போது பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி விண்ணப்பித்தார். ஆனால், நேர் முக தேர்வுக்கு வராத காரணம், ஆலோசனை குழு உறுப்பினர் கங்குலியுடன் மோதல் காரணமாக, சாஸ்திரி விண்ணப்பிக்காமல் இருந்தார். ஒருவழியாக அவரை சரிக்கட்டி வழிக்கு கொண்டு வந்த பிசிசிஐ., தற்போது அவரை தலைமை பயிற்சியாளராக நியமித்தது.

இவர் வரும் 2019 ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் நீடிப்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Team India Coach : Ravi Shastri Appointed as Team India Coach

அடுத்த செய்தி

டிரெண்டிங்