ஆப்நகரம்

அம்பயர் கண்ணில் மண்ணைத் தூவிய மனீஷ் பாண்டே... அபராதத்தில் இருந்து எஸ்கேப்!

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய வீரர் மணீஷ் பாண்டே, பீல்டிங் செய்வது போல பாவனை செய்ததை அம்பயர்கள் கவனிக்க தவறியதால் அபராதத்தில் இருந்து இந்திய அணி தப்பியது.

Samayam Tamil 24 Jan 2020, 5:57 pm
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
Samayam Tamil Manish Pandey


பென்னட்டுக்கு வாய்ப்பு
நியூசிலாந்து அணியில் ஹமீஸ் பென்னட் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். இந்திய அணியில் சாம்சன், ரிஷப் பந்த் ஆகியோர் புறக்கணிப்பட்டனர். கே.எல் விக்கெட் கீப்பராக களமிறக்கப்பட்டார். சுழலில் சஹால் வாய்ப்பு பெற்றார்.

பாண்டே பாவனை
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு முன்ரோ (59), வில்லியம்சன் (51), ராஸ் டெய்லர் (54*)
ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க நியூசிலாந்து அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது போட்டியின் கடைசி ஓவரில் இந்திய வீரர் மணீஷ் பாண்டே பீல்டிங் செய்த போது பந்தை எடுக்காமல் போலியாக வெறும் கையை வைத்து சைகை வீசினார்.

அபராதம்
ஐசிசியின் விதிகளின் படி இப்படி பந்தை எடுக்காமல் சைகை செய்வது தவறாகும். இதை அம்பயர் கவனித்திருந்தால், நியூசிலாந்து அணிக்கு 5 கூடுதல் ரன்கள் அபராதமாக கிடைத்திருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாகம் இதை அம்பயர்கள் கவனிக்க தவறியதால், இந்திய அணி அபராதத்தில் இருந்து தப்பியது. ஆனால் இதை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


பீல்டிங் மோசம்
இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் பீல்டிங்கில் படுமோசமாகவே செயல்பட்டனர். நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யும் போது களத்தில் எளிதாக ரன்களை விட்டுக்கொடுத்தனர். இதை இந்திய அணி வீரர்கள் சரிசெய்ய முயற்சிக்கவில்லை என்றால் நிச்சயம் இந்திய அணிக்கு பாதகமாகவே இந்த முடிவு அமையும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்