ஆப்நகரம்

மிரட்டிய இந்திய பவுலர்கள்... ஆட்டம் கண்ட நியூசி... இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்கு!

ஆக்லாந்து: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது.

Samayam Tamil 26 Jan 2020, 2:00 pm
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டியில் இந்திய அணி வென்றது. இரண்டாவது டி-20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகலும் மாற்றம் இல்லாம களமிறங்கியது.
Samayam Tamil Team india


சுமாரான துவக்கம்
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு முன்ரோ (26), கப்டில் (33) சுமாரான துவக்கம் அளித்தனர். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் (14) ரவிந்திர ஜடேஜா சுழலில் சிக்கினார். பின் வந்த கிராண்ட்ஹோம் (3) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ரன்கள் சேர்க்கவே தட்டுத்தடுமாறியது.


கடைசி நேரத்தில் அனுபவ டெய்லர், டிம் செய்பர்ட் ஆகியோர் ஒன்றும் இரண்டுமாக தடுமாறி திக்கி திணறி ரன்கள் சேர்க்க, நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட் சாய்த்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்