ஆப்நகரம்

ஆமை வேக பவுலிங்கால் இந்திய அணிக்கு ஆப்பு வச்ச ஐசிசி!

துபாய்: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி-20போட்டியில் ஆமைவேகத்தில் பவுலிங் செய்த இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

Samayam Tamil 3 Feb 2020, 9:16 pm
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி-20போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆமை வேகத்தில் பவுலிங் செய்தனர்.
Samayam Tamil Team India


ஒரு ஓவர் குறைவு
இப்போட்டியில் வழக்கமாக குறிப்பிட்ட நேரத்துக்குள் வீசப்பட வேண்டிய ஓவர்களை விட இந்திய அணி பவுலர்கள் 1 ஓவர் குறைவாக பவுலிங் செய்திருந்தனர். இதை போட்டி நடுவரான கிறிஸ் பிராட் உறுதி செய்தார். இதையடுத்து ஐசிசி இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஆஜராக வேண்டாம்
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐசிசி வீரர்களின் நடத்தை விதி எண் 2.22ன் படி கொடுப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஓவர்கள் வீசத்தவறும் பட்சத்தில் வீரர்களுக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதன் அடிப்படையில் தான் இந்திய அணிக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தவறை ஒப்புக்கொண்டதால் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அவசியமில்லை” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை
ஐந்தாவது டி-20 போட்டியில் களத்தில் அம்பயர்களாக கிறிஸ் பிரவுன், ஷான் ஹேக், ஆகியோர் இருந்தனர். மூன்றாவது அம்பயராக , ஆஸ்லே மெஹ்ரோட்ரா செயல்பட்டார். இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ஹாமில்டனில் நடக்கிறது. முன்னதாக நான்காவது டி-20 போட்டியிலும் இந்திய அணி மெதுவாக பவுலிங் செய்த காரணத்தால், போட்டி சம்பளத்தில் இருந்து 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்