ஆப்நகரம்

Bob Marley: இந்திய கிரிக்கெட்டின் ‘பாப் மார்லே’ : டெக்கி டோரியாவை தெரியுமா?

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட்டின் ‘பாப் மார்லே’ டெக்கி டோரியாவை தெரியுமா உங்களுக்கு.

Samayam Tamil 27 Dec 2018, 3:51 pm

ஹைலைட்ஸ்:

ஆல் ரவுண்டராக கிரிக்கெட்டில் விளையாடிய போதும், இவரின் டான்ஸ் கொண்டாட்டத்தை பார்க்கவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதற்கு இளம் வயது முதலே டான்ஸ் மீது கொண்ட ஆர்வம் தான் என்கிறார் டெக்கி.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Techie doria
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட்டின் ‘பாப் மார்லே’ டெக்கி டோரியாவை தெரியுமா உங்களுக்கு.
அருணாச்சல பிரதேசத்தின் நியோபாங் கிராமத்தை சேர்ந்தவர் டெக்கி டோரியா. இவர் இந்தியாவின் பாப் மார்லே என செல்லமாக அழைக்கப்படுகிறார். ஜமைக்காவின் உலகப்புகழ் பாடகர் தான் இந்த பாப் மார்லே. இவர் அவரைப்போல ஹேர் ஸ்டைல் வைத்துள்ளதால், இளம் வயது முதலே இவரை பலரும் பாப் மார்லே என அழைக்கின்றனர்.

கண்டு கொள்ளாத டெக்கி:
டெக்கி பள்ளியில் படிக்கும் போது பல இவரை பாப் மார்லே என அழைத்துள்ளனர். ஆனால் அப்போது டெக்கி இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இவர் தற்போது இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை தொடரில் முதல் முறையாக கலமிறக்கவுள்ளார்.
யாரு பாப் மார்லே:
இந்நிலையில் அருணாச்சல் அணிக்காக 6 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள 24 வயதான டெக்கி, 230 ரன்கள் மற்றும் 13 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் முதலில் பாப் மார்லே யார் என்றே தெரியாமல் இருந்த இவர், பலரும் தன்னை அழைப்பதால் ஆர்வமாக கூகுளில் தேடியுள்ளார்.
இனி வெட்டவே மாட்டேன்:
அதன் பின் மார்லேவைப்பற்றி தெரிந்து கொண்ட டெக்கி, அப்படிப்பட்ட ஜாம்பவானுடன் ஒப்பிடுவதை நினைத்து பெருமை கொள்வதாகவும் அவரைப்போல கிடைத்த ஹேர்ஸ்டைலை இனி வெட்டவே மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
டான்ஸ் மீது ஆர்வம்:
இவர், ஆல் ரவுண்டராக கிரிக்கெட்டில் விளையாடிய போதும், இவரின் டான்ஸ் கொண்டாட்டத்தை பார்க்கவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதற்கு இளம் வயது முதலே டான்ஸ் மீது கொண்ட ஆர்வம் தான் என்கிறார் டெக்கி. தவிர, டான்ஸ் ஆடுவதால் கிரிக்கெட் மைதானத்தில் தனக்கு தனி மகிழ்ச்சி மற்றும் சக்தி கிடைப்பதாகவு ம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்