ஆப்நகரம்

Shikhar Dhawan: நன்றி மஹி பாய்! தோனி ஓய்வுக்கு குவியும் உருக்கமான ட்வீட்கள்...

தோனியின் ஒய்வு அறிவிப்பிற்கு ஷிகர் தவான் உட்பட ரசிகர்கள் பலரும் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்

Samayam Tamil 15 Aug 2020, 9:08 pm
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஒய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள தோனியின் ரசிகர்கள் ட்விட்டரில் உருக்கமாக பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் ஷிகர் தவன் ட்விட்டரில், '' கேப்டன். தலைவர். லெஜண்ட். நாட்டிற்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி மஹி பாய்!'' என பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil ms dhoni


''என்னையும் ஒரு தலைமுறை இளைஞர்களை ஊக்கப்படுத்தியதற்காகவும், விமர்சனங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், அமைதியின் மதிப்பை எங்களுக்குக் கற்பித்ததற்காகவும், கடின உழைப்பு மற்றும் ஒருமைப்பாட்டுடன் சாத்தியமற்றதை எவ்வாறு அடைவது என்பதைக் காண்பிப்பதற்காகவும் நன்றி''.

''538 சர்வதேச போட்டிகள், 17266 சர்வதேச ரன்கள், 16 சர்வதேச சதங்கள், 108 சர்வதேச ஐம்பதுகள், 359 சர்வதேச சிக்ஸர்கள், 634 சர்வதேச கேட்சுகள், 195 சர்வதேச ஸ்டம்பிங்ஸ் என கணக்கிட முடியாத நினைவுகள்''

''லெஜண்ட் , புதிரானவர், அழிப்பவர், டெர்மினேட்டர், கணிக்க முடியாதவர், தலைவர், சாம்பியன்களின் சாம்பியன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்''

''2020 இல் மோசமான செய்திகளை கேட்டு வருகிறோம். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இதயம் வலிக்கிறது.ஒரு கேப்டன் மற்றும் வீரராக நீங்கள் தேசிய கடமைக்கு சேவை செய்தீர்கள். ஒரு ரசிகராக நாங்கள் அனைவரும் உங்களை இந்திய அணியில் இழப்போம்''

MS Dhoni: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... ரசிகர்கள் அதிர்ச்சி!!

'' சர்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பொற்காலத்தின் முடிவு! நவீன விளையாட்டின் ஒரு லெஜண்ட்''

அடுத்த செய்தி

டிரெண்டிங்