ஆப்நகரம்

இனிமே இவரெல்லாம் இந்திய அணிக்கு தேவையா? : ‘தல’ தோனி குறித்து காம்பிர் விளக்கம்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கு பின் அம்பயரிடம் இருந்து பந்தை முன்னாள் கேப்டன் தோனியின் பேட்டிங் படுமோசமாக இருந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் காம்பிர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Jul 2018, 3:50 pm
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கு பின் அம்பயரிடம் இருந்து பந்தை முன்னாள் கேப்டன் தோனியின் பேட்டிங் படுமோசமாக இருந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் காம்பிர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதை இங்கிலாந்து அணி 2-1 என கைப்பற்றியது. இதில் முன்னாள் கேப்டன் தோனியின் ஆமை வேக பேட்டிங் குறித்து பலரும் தாறுமாறாக கருத்து தெரிவித்தனர்.

மீண்டும் தலைதூக்கிய ஓய்வு....
தவிர, வெற்றிக்கு கொஞ்சம் கூட முயற்சிக்காத வயதான தோனி, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்துக்களை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர்.

இனி தேவையா தோனி....
இந்நிலையில் இந்திய கிர்க்கெட் அணியின் காம்பிர் இனி இந்திய அணிக்கு தோனி தேவையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து காம்பிர் கூறுகையில், ‘இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது, மூன்றாவது ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் தோனியின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இதற்கு முன்பாகவும் தோனி இது போல ஆமை வேக ஆட்டம் விளையாடியுள்ளார். ஆனால் அப்போது அதற்கான தேவை இருந்தது. அப்படி விளையாடினாலும் கடைசி 10 ஓவரில் விரைவாக ரன்கள் சேர்த்தார். அது இத்தொடரில் கண்டிப்பாக இல்லை. இனி இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு வழி கொடுப்பது சிறந்தது.’ என்றார்.

தள்ளாடும் தோனி.....
இதுகுறித்து முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில், ‘தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என நினைத்தால் அவர் சிறப்பாக செயல்படும் இடத்தை தேர்வு செய்து விளையாட வேண்டும். அதை விட்டு இந்திய அணியின் மிடில் ஆர்டர் அணியை சரியான பாதைக்கு அழைத்துச்செல்ல வேண்டிய இடம். அதில் தற்போது தோனி தள்ளாடுகிறார். இந்நிலையில் கடந்த ஒரே ஆண்டாகவே இவர் தனது இடத்தில் சொதப்பி வருகிறார்.’ என்றார்.

Mumbai: Mahendra Singh Dhoni has come under heavy criticism lately mainly due to his poor batting form. Despite Team India emphatically winning the opener against England in the ODI series, the visitors were outplayed by Eoin Morgan and team to lose the series by 2-1.

அடுத்த செய்தி

டிரெண்டிங்