ஆப்நகரம்

England vs Pakistan: மழை காரணமாக தாமதமாகத் தொடங்கிய 2ஆம் நாள் ஆட்டம்!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 14 Aug 2020, 5:46 pm
டாஸ் வென்று பேட் செய்ய முடிவு செய்த பாகிஸ்தான் அணி, முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துத் திணறி வருகிறது. அதிகபட்சமாக அபித் அலி 60 ரன்கள் சேர்த்தார். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 250 ரன்களையாவது கடந்தால் மட்டுமே இங்கிலாந்து அணியைச் சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil England vs Pakistan


முதல்நாள் ஆட்டம் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு 46 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டதால் மீதமுள்ள நாட்களில் 98 ஓவர்கள் வீசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சௌதம்டனில் இன்றும் அடிக்கடி மழை குறுக்கிடும் என்று இங்கிலாந்து வானிலை மையம் தெரிவித்துள்ளதால், பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 126/5 எனத் திணறி வரும் பாகிஸ்தான் அணி 250 ரன்களை எட்டில் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியை உருவாக்க முடியும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

சௌதம்டான் மைதானத்தில் அடிக்கடி மழை குறுக்கிடும் எனத் தெரிந்தும் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்து களமிறங்கியது. ஷான் மசூத் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் அசார் அலி 57 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6,000 ரன்களை எட்டிவிடலாம் என்ற நிலையில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அபித் அலி 99 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில் 60 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். 3 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்திருந்த பாகிஸ்தான் அணி அசாத் ஷாபிக், பாவத் அலாம் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்து 120 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அசார் அலியை 8ஆவது முறையாக ஆட்டமிழக்கச் செய்து சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை இரண்டு விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். ஸ்டூவர்ட் பிராட், சாம் கரன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

சென்னை வந்தார் ‘தல’ தோனி... ட்விட்டரைத் தெறிக்கவிடும் ரசிகர்கள்!

ஆண்டர்சன் இதுவரை 155 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து பேசிய சாம் கரன், “உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளராக ஆண்டர்சன் திகழ்ந்து வருகிறார். அவரிடமிருந்து பல விஷயங்களை கற்று வருகிறேன். இப்போட்டியில் அனைவரும் சிறப்பாகப் பந்து வீசினோம். பாபர் அசாம் போன்ற வீரர்களை விரைவில் வீழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டோம். 126/5 எனப் பாகிஸ்தானை கட்டுப்படுத்துள்ளோம். இரண்டாம் நாள் ஆட்டத்திலும் எங்கள் கை ஓங்கியிருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்