ஆப்நகரம்

கோப்பை வெல்லாவிட்டாலும் மொத்த உலக கிரிக்கெட்டுக்கும் கேப்டன் ஆன மிதாலி ராஜ்

ஐசிசி வெளியிட்ட பெண்கள் உலகக் கோப்பை 2017 கனவு அணியின் கேப்டனாக இந்தியாவின் கேப்டன் கூல் மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

TOI Sports 24 Jul 2017, 6:35 pm
ஐசிசி வெளியிட்ட பெண்கள் உலகக் கோப்பை 2017 கனவு அணியின் கேப்டனாக இந்தியாவின் கேப்டன் கூல் மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil the team of the icc womens world cup 2017 has been announced
கோப்பை வெல்லாவிட்டாலும் மொத்த உலக கிரிக்கெட்டுக்கும் கேப்டன் ஆன மிதாலி ராஜ்


நேற்று நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதியது. வெறும் 9 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி கோப்பை வென்று சாதனைப் படைக்கும் வாய்ப்பை தவறவிட்டது.

இதையடுத்து 4வது முறையாக இங்கிலாந்து பெண்கள் அணி உலகக் கோப்பையை வென்று சாதித்துள்ளது.

இந்நிலையில் ஐசிசி சார்பாக பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் கனவு அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் கூல் என அழைக்கப்படும் மிதாலி ராஜ் கனவு அணி கேப்டனாகவும், கோப்பை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் டெய்லர் விக்கெட் கீப்பராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் இந்திய வீராங்கனைகள் 3 பேர் இடம் பிடித்துள்ளனர்.

The Team of the ICC Women's World Cup 2017 has been announced! #WWC17https://t.co/ApWRwuffGG pic.twitter.com/YRMQ3lTT3V — ICC (@ICC) July 24, 2017

12 பேர் கொண்ட அணியின் வீராங்கனைப் பட்டியல்:

மிதாலி ராஜ் (கேப்டன்) - இந்தியா


சாரா டெய்லர் (விக்கெட் கீப்பர் - இங்கிலாந்து

டம்சின் பியூமண்ட் - இங்கிலாந்து

லாரா வால்வர்ட் - தென் ஆப்ரிக்கா

எல்சி பெர்ரி - ஆஸ்திரேலியா

ஹர்மன் பிரீத் கவுர் - இந்தியா

தீப்தி சர்மா -இந்தியா


மரிஜானே காப் - தென் ஆப்ரிக்கா

டானே வான் நெய்கர்க் -தென் ஆப்ரிக்கா

அன்யா ஸ்ரப்சோல் - இங்கிலாந்து

அலெக்ஸ் ஹார்ட்லி - இங்கிலாந்து

நடாலி சேவியர் -இங்கிலாந்து

அடுத்த செய்தி

டிரெண்டிங்