ஆப்நகரம்

PAK vs SL : காலியாக காட்சியளிக்கும் கராச்சி...: இலங்கை - பாக்., ‘மேட்ச்’சை பார்க்க கூட்டம் கம்மி!

கராச்சி: பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியை காண ரசிகர்களின் ஆர்வம் குறைவாக காணப்பட்டது.

Samayam Tamil 30 Sep 2019, 4:19 pm
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி கராச்சியில் பெய்த கனமழை காரணமாக ‘டாஸ்’ கூட போடப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.
Samayam Tamil PAK vs SL


10 ஆண்டு கனவு..
கடந்த 2009ல் இதேபோல பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து சுமார் 10 ஆண்டு போராட்டத்துக்கு பின் தற்போது பாகிஸ்தானில் முதல் முறையாக சர்வதேச போட்டி நடக்கிறது.

இந்தியாவை இந்தியாவில் வச்சே அடிக்கனும்... : வெறித்தனமான பிளாண்டர்!

இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

கூட்டம் கம்மி...
இந்நிலையில் பாகிஸ்தானில் 10 ஆண்டுக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் போது அதை பார்க்க அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே உள்ளது.

மழையால் இரண்டு நாள் ரத்தான கூத்து தெரியுமா? பாக்.,கை படுகேவலப்படுத்திய ஐசிசி!

கராச்சி மைதானத்தில் பெரும்பாலான சீட்கள் காலியாகவே காணப்பட்டது. எல்லையில் நிலவிய பதட்டம் காரணமாக பாகிஸ்தான் அணியுடனான இருநாட்டு கிரிக்கெட் தொடரை பிசிசிஐ தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்