ஆப்நகரம்

சச்சினை அவுட் ஆக்கியதால் கொலை மிரட்டல், நடுவருக்கும்தான்: டிம் பிரெஸ்னன் வீரர் ஓபன் டாக்!

சச்சின் டெண்டுல்கரை அவுட் ஆக்கியதால் எனக்குக் கொலை மிரட்டல் வந்தது என இங்கிலாந்து அணி முன்னாள் பௌலர் டிம் பிரெஸ்னன் பேசியுள்ளார்

Samayam Tamil 13 Jun 2021, 1:19 pm
கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், 1989ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். அவர் ஓய்வுபெற்றுப் பல ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும் கூட இன்றளவும் சச்சினுக்கு ரசிகர்கள் கூட்டம் குறைந்தபாடில்லை.
Samayam Tamil டிம் பிரெஸ்னன்


100 சதம் அடித்து வரலாற்றுச் சாதனையாளராக சச்சின் திகழ்ந்து வரும் நிலையில், அவரை 100ஆவது சதத்தினை அடிக்க விடாமல் தடுத்து விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து பௌலர் டிம் பிரெஸ்னன் கொலை மிரட்டலை எதிர்கொண்டிருக்கிறார். அதனைப் பல ஆண்டுகள் கழித்து தற்போது கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த போது, “2011ஆம் ஆண்டு இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் சச்சின் சிறப்பாக விளையாடினார். அவர் 90 ரன்களை கடந்ததால் நிச்சயம் சதம் அடித்து 100 சதம் எடுத்து வரலாற்றுச் சாதனை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் 91 ரன்கள் எடுத்திருந்தபோது, நான் எல்.பி.டபிள்யூ ஆக்கிவிட்டேன்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “அந்த பந்து இன் சைட் எட்ஜ் ஆகித்தான் சச்சினின் பேடில் பட்டது. இதனை நடுவர் கவனிக்காமல் அவுட் வழங்கிவிட்டார். இதனால், நடுவருக்கும் எனக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது. தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததால் நாங்கள் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்” எனக் கூறினார்.

இந்த சம்பவம் நடைபெற்று 9 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் தற்போது இதுகுறித்து பிரெஸ்னன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்