ஆப்நகரம்

மீண்டும் மிரட்டிய தினேஷ் கார்த்திக்: தமிழகம் ‘ஹாட்ரிக்’ வெற்றி!

கோவா அணிக்கு எதிரான உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான சையது முஸ்தாக் அலி கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் மீண்டும் அசத்த தமிழக அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

Samayam Tamil 11 Jan 2018, 9:16 pm
விசாகப்பட்டினம்: கோவா அணிக்கு எதிரான உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான சையது முஸ்தாக் அலி கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் மீண்டும் அசத்த தமிழக அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
Samayam Tamil tn beat goa for third straight win
மீண்டும் மிரட்டிய தினேஷ் கார்த்திக்: தமிழகம் ‘ஹாட்ரிக்’ வெற்றி!


இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல ஆண்டு தோறும் நடத்தப்படும் டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடராகும். இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும்.

இதில் தெற்கு பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, தனது மூன்றாவது லீக் போட்டியில் கோவா அணியை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற தமிழக அணி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

தினேஷ் கார்த்திக் விளாசல்:
இதையடுத்து களமிறங்கிய தமிழக அணிக்கு வாஷிங்டன் சுந்தர் (14), பாபா அபர்ஜீத் (26), ஜெகதீசன் (10*) ஆகியோர் ஓரளவு கைகொடுத்தனர். தினேஷ் கார்த்திக் 43 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சர் என 56 ரன்கள் அடித்து அவுட்டானார். இதையடுத்து தமிழக அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய கோவா அணிக்கு கேப்டன் கமாத்தை (41) தவிர, மற்ற வீரர்கள் ஏமாற்ற, அந்த அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தமிழக அணி தனது அடுத்த லீக் போட்டியில் கர்நாடகாவை எதிர்கொள்கிறது.

VIZIANAGARAM (AP): Tamil Nadu defeated Goa by 25 runs to register its third straight win in the Syed Mushtaq Ali Trophy T20 South Zone tournament on Thursday.

அடுத்த செய்தி

டிரெண்டிங்