ஆப்நகரம்

‘2023ஆம் ஆண்டில்’…ஒரு போட்டியில் கூட…களமிறங்க வாய்ப்பில்லாத 3 ஸ்டார் வீரர்கள்…கரணம் இதுதான்!

2023ஆம் ஆண்டில், ஒரு போட்டியில் கூட களமிறங்க இந்த 3 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்படுகிறது.

Curated byமதுரை சமயன் | Samayam Tamil 1 Jan 2023, 5:28 pm
கடந்த நவம்பரில் டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தப் பிறகு, இந்திய அணியில் அதிகப்படியாக இளம் வீரர்கள்தான் அதிகளவில் இடம்பிடித்து வருகிறார்கள்.
Samayam Tamil top three indian players who cant be able to play in single international game
‘2023ஆம் ஆண்டில்’…ஒரு போட்டியில் கூட…களமிறங்க வாய்ப்பில்லாத 3 ஸ்டார் வீரர்கள்…கரணம் இதுதான்!


டெஸ்ட் அணியில்தான் சீனியர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும், ஜுன் மாத முதல் வாரத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் முடிந்த பிறகு, டெஸ்டிலும் சீனியர்கள் கழற்றிவிடப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதன் காரணமாக, சில நட்சத்திர மூத்த வீரர்கள் இனி இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த வருடத்தில் சில மூத்த வீரர்களுக்கு ஒரு போட்டியில்கூட களமிறங்க முடியாது எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் மூன்று முக்கிய மூத்த வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

3.இஷாந்த் ஷர்மா:

இந்திய அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, கடைசியாக 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் இந்திய அணிக்காக விளையாடினார். கடந்த 13 மாதங்களாக அவர் இந்திய அணியில் இடம்பெறவே இல்லை. டெஸ்ட் அணியில் மட்டும்தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்து வந்த நிலையில், முகமது சிராஜ் இவரது இடத்தை பிடித்துவிட்டதால், இஷாந்த் ஷர்மாவை பிசிசிஐ ஓரங்கட்டிவிட்டது. இனி இவர் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லை என்ற நிலைதான் இருக்கிறது.

2.ஷிகர் தவன்:

இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரர் ஷிகர் தவனுக்கு, கடந்த ஆண்டில் அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் பிசிசிஐ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு விளையாடவில்லை. மேலும், இளம் இடது கை பேட்டர் இஷான் கிஷன் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால், இனி தவனுக்கு மாற்றாக இஷான் கிஷன், ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் ஆகியோரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

குறிப்பாக, தவனுக்கு மாற்றாக இனி இஷான் கிஷனைத்தான் பிசிசிஐ முன்னிறுத்த விரும்பும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

1.தினேஷ் கார்த்திக்:

கடந்த வருடத்தில் நடைபெற்ற ஐபிஎல் 15ஆவது சீசனில், ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்த தினேஷ் கார்த்திக், தொடர்ந்து காட்டடி அடித்து, இந்திய அணியில் இடம்பிடித்தார். டி20 உலகக் கோப்பை தொடருக்காகவே இவர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அத்தொடர் முடிந்தப் பிறகு இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

வரும் ஜனவரி 3ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான தலா மூன்று டி20, ஒருநாள் போட்டிகளிலும் இவர் சேர்க்கப்படவில்லை. இனியும் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைக்கவே, கிடைக்காது எனக் கருதப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்