ஆப்நகரம்

பேட்டிங் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் மாயங்க் அகர்வால் - டுவிட்டரில் அட்டகாச வரவேற்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாயங்க் அகர்வால் என்ற வீரர் முதன் முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 30 Sep 2018, 4:39 pm
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாயங்க் அகர்வால் என்ற வீரர் முதன் முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil mayank-agarwal1


கடந்த ஒன்னறை ஆண்டுகாலத்தில் இந்தியாவில் நடந்த உள்ளூர் தொடர்களில் அதிரடியாக ரன்களை குவித்தவர் மாயங்க் அகர்வால்.

இவர் 2017-18 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய மாயங்க் அகர்வால் 8 போட்டிகளில் 1160 ரன்களை குவித்துள்ளார். அதோடு 2017-18ல் மட்டும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் 2000க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.

தவான் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 8 இன்னிங்ஸில் விளையாடி 162 ரன்கள் மட்டும் எடுத்தார்.

மேலும் படிக்க: யார் இந்த மாயங்க் அகர்வால் வெ.இ டெஸ்ட் தொடருக்கு அறிமுகமாகும் இந்திய வீரர்

அதன் காரணமாக தவனுக்கு பதிலாக மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போல் மற்றொரு தொடக்க வீரர் முரளி விஜய்க்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ஷா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மாயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதற்கு டுவிட்டரில் வாழ்த்து குவிந்து வருகின்றது.

டுவிட்டர் வாழ்த்து:











அடுத்த செய்தி

டிரெண்டிங்