ஆப்நகரம்

அவுட்க்கு பதிலாக சிக்ஸ் கொடுத்த டுபாக்கூர் அம்பயர்!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அம்பயர் இயன் குல் அவுட் என்பதற்குப் பதிலாக சிக்ஸ் என்று சைகை காட்டி குளறுபடி செய்தார்.

TNN 27 Mar 2017, 8:45 pm
தர்மசாலா: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அம்பயர் இயன் குல் அவுட் என்பதற்குப் பதிலாக சிக்ஸ் என்று சைகை காட்டி குளறுபடி செய்தார்.
Samayam Tamil umpire ian gould signals six instead of out
அவுட்க்கு பதிலாக சிக்ஸ் கொடுத்த டுபாக்கூர் அம்பயர்!


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் கடைசி போட்டி தர்மசாலாவில் நடக்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 332 எடுத்து 32 ரன்கள் முன்னிலை பெற்றது.

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், இந்திய அணியின் வெற்றிக்கு 106 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இப்போட்டியின் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 137 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, அஸ்வின் வீசிய பந்தில் ஹேசல்வுட் எல்பிடபிள்யூ ஆனார். அம்பயர் இயன் குல்லின் முடிவில் திருப்தியில்லாத ஹேசல்வுட் ரிவுயூ கோரினார். மூன்றாவது அம்பயரின் பார்வைக்குப் பிறகு அவர் அவுட் என்று உறுதிசெய்யப்பட்டது.

ஹேசல்வுட் அவுட் ஆகிவிட்டதாக உறுதியாக நம்பிய இந்திய வீரர்கள் இதற்குள் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினர். ஆனால், களத்தில் இருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஹேசல்வுட் மற்றும் வேட் ஆகியோர் பிட்ச் அருகிலேயே மூன்றாவது அம்பயரின் முடிவுக்காக காத்துநின்றனர். இப்படி ஆளுக்கு ஒரு திசையில் சென்றுவிட்டதால் அம்பயர் இயன் குல் எந்த திசையை நோக்கி அவுட் என்று விரலை உயர்த்துவது என்று குழப்பினார். கடைசியில், இரு கைகளையும் இரண்டு திசையில் உயர்த்தி சிக்ஸ் என்பது போல சைகை செய்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்